×

1 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தாத விஷால்! எச்சரித்த நீதிபதி

ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தாததால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித் துறையினர் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் விஷாலுக்கு சம்மன் (அழைப்பாணை) அனுப்பினர். பல முறை அழைப்பாணை அனுப்பியும் விஷால் நேரில் ஆஜராகததால் அவர் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் நேரில் ஆஜரானார்.
 
1 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தாத விஷால்! எச்சரித்த நீதிபதி

ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தாததால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித் துறையினர் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் விஷாலுக்கு சம்மன் (அழைப்பாணை) அனுப்பினர்.

பல முறை அழைப்பாணை அனுப்பியும் விஷால் நேரில் ஆஜராகததால் அவர் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று  எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் நேரில் ஆஜரானார்.

மேலும், இந்த வழக்கு குறித்த கேள்விகள் கேட்க வரும் 26-ம் தேதி நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.

அப்படி, ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக பிடியாணை (பிடிவாரண்ட்) பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி மலர்மதி எச்சரித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News