×

கொள்ளையரை விரட்டிய நெல்லை தம்பதிக்கு வீரதீர விருது…

Nellai Collector announce award for elder couple – திருநெல்லை மாவட்டத்தில் வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை விரட்டி அடித்த வயதான தம்பதிக்கு விருது வழங்க அம்மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையம் பகுதி கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கடந்த 11ம் தேதி இரவு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது 2 கொள்ளையர்கள் அங்கே வந்தனர். அவரின் கழுத்தை துண்டால் ஒருவன் நெறிக்க மற்றொருவன் அரிவாளை காட்டி மிரட்டினான். ஆனாலும், பயப்பட்டாத
 
கொள்ளையரை விரட்டிய நெல்லை தம்பதிக்கு வீரதீர விருது…

Nellai Collector announce award for elder couple – திருநெல்லை மாவட்டத்தில் வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை விரட்டி அடித்த வயதான தம்பதிக்கு விருது வழங்க அம்மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கடையம் பகுதி கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கடந்த 11ம் தேதி இரவு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது 2 கொள்ளையர்கள் அங்கே வந்தனர். அவரின் கழுத்தை துண்டால் ஒருவன் நெறிக்க மற்றொருவன் அரிவாளை காட்டி மிரட்டினான்.

ஆனாலும், பயப்பட்டாத சண்முகவேல் அவர்களுடன் சண்டை போட்டார். சத்தம் கேட்டு ஒடிவந்த அவரின் மனைவியும் அவரோடு சேர்ந்து கொள்ளையர்களை தாக்கினார். அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்களை எடுத்து அவர்கள் தாக்க்குதல் கொடுக்க, வயதானவர்கள்தானே சுலபமாக மிரட்டி கொள்ளையடித்து சென்று விடலாம் என்கிற நோக்கத்தில் வந்த கொள்ளையர்கள், அவர்களின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ வெளியானதும் சண்முகவேலும், அவரின் மனைவியும் ஒரே நாளில் ஹீரோ ஆகி விட்டனர்.

இந்நிலையில், அந்த தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க அம்மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News