×

இன்று ரிலிஸாகுமா எனை நோக்கி பாயும் தோட்டா ? – இழுக்கும் பேச்சுவார்த்தை !

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம் நாளை வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இரண்டு ஆண்டுகளாக ரிலிஸாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இதுவரைப் பலமுறை ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கௌதம் மேனனுக்கு இருக்கும் நிதிப் பிரச்சனைகளே காரணம் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் மட்டுமல்லாமல் அவர் தயாரிப்பாளராக இருந்த துருவ
 
இன்று ரிலிஸாகுமா எனை நோக்கி பாயும் தோட்டா ? – இழுக்கும் பேச்சுவார்த்தை !

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம் நாளை வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இரண்டு ஆண்டுகளாக ரிலிஸாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இதுவரைப் பலமுறை ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு கௌதம் மேனனுக்கு இருக்கும் நிதிப் பிரச்சனைகளே காரணம் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் மட்டுமல்லாமல் அவர் தயாரிப்பாளராக இருந்த துருவ நட்சத்திரம், நெஞ்சம் மறப்பதில்லை, நரகாசூரன் ஆகியப் படங்களும் ரிலிஸாகாமல் உள்ளன. இதுபோன்ற காரணஙளால் தனுஷும் இந்தப் படத்தைக் கண்டுகொள்ளாமல் வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் திடீரென செப்டம்பர் 6 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னோட்டமாக படத்தின் டிரைலரும் வெளியானது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

ஆனாலும் இன்னமும் பைனான்சியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடியாமல் இழுத்துக் கொண்டே செல்வதால் இன்று படம் ரிலிஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளைப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் அறிவித்தபடி படம் ரிலிஸாகும். இன்று மகாமுனி, ஜாம்பி மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை படங்கள் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News