×

காசு வாங்கிட்டு காப்புரிமை எதற்கு? – இளையராஜாவை வாறிய எஸ்.ஏ.சந்திரசேகர்

பணத்தை பெற்றுக்கொண்டு இசையமைத்த பின் இளையராஜா அதற்கு காப்புரிமை கேட்க முடியாது என இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். பாடல்களுக்கான ராயல்டி தொகையில் தங்களுக்கான பங்கை கொடுக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர் “திரைப்பட பாடல்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு இசை அமைத்த பின் அந்த பாடல்களுக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது சரியல்ல. பாடலாசிரியர், பாடகரை
 
காசு வாங்கிட்டு காப்புரிமை எதற்கு? – இளையராஜாவை வாறிய எஸ்.ஏ.சந்திரசேகர்

பணத்தை பெற்றுக்கொண்டு இசையமைத்த பின் இளையராஜா அதற்கு காப்புரிமை கேட்க முடியாது என இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

பாடல்களுக்கான ராயல்டி தொகையில் தங்களுக்கான பங்கை கொடுக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர் “திரைப்பட பாடல்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு இசை அமைத்த பின் அந்த பாடல்களுக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது சரியல்ல. பாடலாசிரியர், பாடகரை போல் இசையமைப்பாளரும் பணத்தை பெற்றுக்கொண்டுதான் இசையமைக்கிறார். ஒரு பாடல் தயாரானவுடன் அது தொடர்பான அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கு சொந்தமாகி விடுகிறது”என அவர் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News