×

விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் ? – எஸ் ஏ சி மழுப்பல் பதில் !

நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு அவரின் தந்தை எஸ் ஏ சி பதில் அளித்துள்ளார். நடிகர் விஜய்யும் சில காலமாக ரஜினி பாணியிலான படங்கள் நடிப்பது போல அரசியல் சம்மந்தமாகப் பேசி பரபரப்புகளைக் கிளப்பி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று அவ்வப்போது விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சி பதிலளித்துள்ளார். அதில் ‘என்றைக்காவது விஜய் அரசியலுக்கு
 
விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் ? – எஸ் ஏ சி மழுப்பல் பதில் !

விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் ? – எஸ் ஏ சி மழுப்பல் பதில் !

நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு அவரின் தந்தை எஸ் ஏ சி பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய்யும் சில காலமாக ரஜினி பாணியிலான படங்கள் நடிப்பது போல அரசியல் சம்மந்தமாகப் பேசி பரபரப்புகளைக் கிளப்பி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று அவ்வப்போது விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சி பதிலளித்துள்ளார்.

அதில் ‘என்றைக்காவது விஜய் அரசியலுக்கு வருவேன் என சொல்லியுள்ளாரா?. அவர் பேசிய பேச்சுகளை வைத்து கற்பனை செய்து கொண்டால் நான் என்ன செய்வது? அவர் ஒரு நல்ல நடிகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மீது ஏன் இப்படி தேவையில்லாமல் கல்லடித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. விஜய் முதல்வராக வர வேண்டும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற கேள்வியை என்னிடம் கேட்டால் எப்படி பதில் சொல்வது?  அவர் என்ன சின்ன குழந்தையா ?. 45 வயதாகும் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எந்த தகப்பனுக்கும் தெரியாது.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News