×

இப்ப ஏன் வந்தீங்க? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு – அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சி

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் அதிமுக அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இது போக பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்களாக விளங்கிய ஆடு, மாடு, கோழிகள் உயிரிழந்து விட்டன. நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த தொகுதி
 
இப்ப ஏன் வந்தீங்க? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு – அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சி

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் அதிமுக அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இது போக பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்களாக விளங்கிய ஆடு, மாடு, கோழிகள் உயிரிழந்து விட்டன. நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.
பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த தொகுதி அமைச்சர்கள் பார்வையிட வரவில்லை என புகார் எழுந்துள்ளது. அதேபோல், அங்கு செல்லும் அதிமுக அமைச்சர்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனக்கூறி நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரிடம் வாக்குவாதம் செய்த கிராம மக்கள் அவர் வந்த காரை அடித்து நொறுக்கினர்.

அதேபோல், ஒரத்த நாடு அருகே குருமந்தெரு எனும் கிராமத்திற்கு எந்த நிவாரண உதவியும் கிடைக்காத கோபத்தில் அப்பகுதி மக்கள் அமைச்சர்கள் ரா.துரைக்கண்ணு, செங்கோட்டையன் மற்றும் வைத்தியலிங்க ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து தங்கள் கோபத்தை காட்டினர்.

இப்படி செல்லும் இடமெங்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காட்டுவதால் அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News