×

ஏன் பணம் கொடுக்குறம்னா …? – இவ்ளோ ஓபனாவா பேசுறது பாக்யராஜ் சார் ?

நடிகர் சங்கத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் சார்பால்க ஓட்டுக்குக் காசு கொடுப்பது ஏன் என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தமிழக சட்டசபைத் தேர்தலை விட அதிகக் கவனம் பெறுகிறதோ என எண்ண தோன்றுகிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோத இருக்கின்றன. பாக்யராஜ் அணியில் உள்ள ஐசரி கணேஷ் பாண்டவர் அணியில் இருந்தவர்களைக் காசு கொடுத்து தங்கள் பக்கம் இழுத்துள்ளதாகக்
 
ஏன் பணம் கொடுக்குறம்னா …? – இவ்ளோ ஓபனாவா பேசுறது பாக்யராஜ் சார் ?

நடிகர் சங்கத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் சார்பால்க ஓட்டுக்குக் காசு கொடுப்பது ஏன் என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தமிழக சட்டசபைத் தேர்தலை விட அதிகக் கவனம் பெறுகிறதோ என எண்ண தோன்றுகிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோத இருக்கின்றன. பாக்யராஜ் அணியில் உள்ள ஐசரி கணேஷ் பாண்டவர் அணியில் இருந்தவர்களைக் காசு கொடுத்து தங்கள் பக்கம் இழுத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் சார்பாக நாடக நடிகர்களுக்கு ஒட்டுக்குக் காசு கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. நேற்று வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் இது குறித்து சூசமாகப் பதில் அளித்துள்ளார். அதில் ‘நாடகக் கலைஞர்களை பாக்க போனா காசு கேப்பாங்க… ஏன்னா அவங்க எப்பவுமே கஷ்டத்துலதான் இருக்காங்க… நாங்க கஷ்டத்துல இருக்கோம் ஓட்டு கேக்க வந்துட்டான்னு கடிஞ்சுப்பாங்க… அதனால இந்தா இப்போதைக்கு இத வைச்சிக்க ஆட்சிக்கு வந்ததும் மத்தத பாத்துக்கலாம்னு சொல்லுவோம்… அது நான் போனாலும் அதான்… வேற யார் போனாலும் அதான்.’ என ஓபனாக பேசியுள்ளார்.

பாக்யராஜின் இந்த பேச்சு நடிகர் சங்கத் தேர்தலில் புதிய சர்ச்சைகள் உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News