×

மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகன்– கொடூரமாக கொலை செய்த மாமனார்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரசவத்துக்காக தாய்வீட்டுக்கு சென்ற தனது மனைவியை அழைக்கச்சென்ற ராஜேந்திரன் எனும் நபர் அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் இடையார்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஷாலினி. இவர் கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இவரை அழைப்பதற்காக ராஜேந்திரன் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற அவரிடம் ‘மகளை அனுப்ப முடியாது என்றும் சம்பாதிக்க துப்பில்லாதவன் என்றும் அவரை’ மனைவியும் மாமியாரும் அவமதித்துள்ளனர்.
 
மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகன்– கொடூரமாக கொலை செய்த மாமனார்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரசவத்துக்காக தாய்வீட்டுக்கு சென்ற தனது மனைவியை அழைக்கச்சென்ற ராஜேந்திரன் எனும் நபர் அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் இடையார்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஷாலினி. இவர் கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இவரை அழைப்பதற்காக ராஜேந்திரன் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகன்– கொடூரமாக கொலை செய்த மாமனார்

ஆனால் அங்கு சென்ற அவரிடம் ‘மகளை அனுப்ப முடியாது என்றும் சம்பாதிக்க துப்பில்லாதவன் என்றும் அவரை’ மனைவியும் மாமியாரும் அவமதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் இருவரையும் அங்கேயே தாக்கிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இதை ஷாலினியும் அவரது அம்மாவும் தந்தை தங்கமணியிடம் சொல்லியுள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தங்கமணி ஆவேசமாக ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று தனது மருமகனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இது சம்மந்தமாக தகவல் போலிஸுக்குத் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News