×

கணவணை ஆள்வைத்துக் கொலை செய்த மனைவி – நெய்வேலியில் நடந்த கொடூரம் !

நெர்ய்வேலி என்.எல்.சி.யில் வேலை செய்யும் கணவனை ஆள்வைத்து மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் சின்னசேலம் பகுதியில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று பற்றி எரிவதைப் பார்த்த போலிஸார் அதை அணைத்து உள்ளே பார்த்தபோது ஒரு நபர் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரைப் பற்றிய விவரங்களை விசாரித்த போலிஸார், அவர் நெய்வேலி என்.எல்.சியில் வேலை செய்யும் பழனிவேல் எனக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று அவரது மனைவிக்குத் தகவல் கொடுக்க இதைக்கேட்ட
 
கணவணை ஆள்வைத்துக் கொலை செய்த மனைவி – நெய்வேலியில் நடந்த கொடூரம் !

நெர்ய்வேலி என்.எல்.சி.யில் வேலை செய்யும் கணவனை ஆள்வைத்து மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் சின்னசேலம் பகுதியில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று பற்றி எரிவதைப் பார்த்த போலிஸார் அதை அணைத்து உள்ளே பார்த்தபோது ஒரு நபர் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரைப் பற்றிய விவரங்களை விசாரித்த போலிஸார், அவர் நெய்வேலி என்.எல்.சியில் வேலை செய்யும் பழனிவேல் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று அவரது மனைவிக்குத் தகவல் கொடுக்க இதைக்கேட்ட அவரது மனைவி அதிர்ச்சியடையாமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள அவரது வீட்டை சோதனை செய்துள்ளனர் போலிஸார். அப்போது அவர் வீட்டில் ரத்தம் சிதறி இருக்க அடுத்தக்கட்ட விசாரணையில் தனது கணவனைக் கொலைசெய்ததை அந்த மனைவி ஒத்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ‘என் கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தினார். இதனைத் தாங்கமுடியாத நான் என் தம்பியிடம் சொல்லி அவரை வீட்டிலேயே வைத்துக் கொலை செய்தோம். வாகனத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயன்றபோது மாட்டிக்கொண்டோம்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் பழனிவேலின் மனைவியான் அஞ்சலைக்குதான் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதைக் கண்டுபிடித்துவிட்டதால்தான் பழனிவேலை அவர் கொன்றுவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News