×

விஜய் 65 ஆவது படத்தை இயக்கப்போவது இவர்தானா ? – கோலிவுட்டில் பரவும் தகவல் !

விஜய்யின் சினிமா கேரியரில் மிக முக்கியமான ஆக்ஷன் படங்கள் வரிசையில் திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகியப் படங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அந்த படங்களை இயக்கி கமர்ஷியல் இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்த இயக்குனர் பேரரசு, அதன் பின் இயக்கிய திருப்பதி, தர்மபுரி மற்றும் திருத்தனி மற்றும் பழனி ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல இந்த படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் நீண்ட காலமாக படம் எதுவும் இயக்காமல் இருந்து
 
விஜய் 65 ஆவது படத்தை இயக்கப்போவது இவர்தானா ? – கோலிவுட்டில் பரவும் தகவல் !

விஜய்யின் சினிமா கேரியரில் மிக முக்கியமான ஆக்‌ஷன் படங்கள் வரிசையில்  திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகியப் படங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அந்த படங்களை இயக்கி கமர்ஷியல் இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்த இயக்குனர் பேரரசு, அதன் பின் இயக்கிய திருப்பதி, தர்மபுரி மற்றும் திருத்தனி மற்றும் பழனி ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல இந்த படங்கள் வெற்றி பெறவில்லை.

அதனால் நீண்ட காலமாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வருகிறார் பேரரசு. இந்நிலையில் விஜய்யின் 65 ஆவது படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் தற்போது பிகில் படத்தை முடித்துவிட்டு, அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவரது 65 ஆவது படத்தை பேரரசு இயக்க இருப்பதாக வெளியான தகவலை விஜய் தரப்போ பேரரசு தரப்போ மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News