×

பெண்ணை வெட்டி சாய்த்து கற்பழித்த கொடூரனுக்கு தூக்கு….

cதேனி மாவட்டத்தை சேர்ந்த எழில் மற்றும் கஸ்தூரி இருவரும் காதலர்கள். இவர்கள் இருவரும் 2011ம் ஆண்டு சுருளி அருவி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கருநாக்கம் முத்தன் பட்டியை சேர்ந்த கட்ட வெள்ளை என்பவன் அங்கு வந்து காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்துள்ளான். மேலும், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினான். அதில், காதலன் எழில் அங்கேயே துடிதுடித்து இறந்தார். அதன்பின் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கஸ்தூரியை ஈவு இரக்கமின்றி வெள்ளையன் பாலியல் பலாத்காரம் செய்தான். அவர்கள்
 
பெண்ணை வெட்டி சாய்த்து கற்பழித்த கொடூரனுக்கு தூக்கு….

cதேனி மாவட்டத்தை சேர்ந்த எழில் மற்றும் கஸ்தூரி இருவரும் காதலர்கள். இவர்கள் இருவரும் 2011ம் ஆண்டு சுருளி அருவி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கருநாக்கம் முத்தன் பட்டியை சேர்ந்த கட்ட வெள்ளை என்பவன் அங்கு வந்து காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்துள்ளான். மேலும், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினான். அதில், காதலன் எழில் அங்கேயே துடிதுடித்து இறந்தார். அதன்பின் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கஸ்தூரியை ஈவு இரக்கமின்றி வெள்ளையன் பாலியல் பலாத்காரம் செய்தான். அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது. அதில், வெள்ளையனே குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. 8 வருடங்கள் நடந்த வழக்கில், வெள்ளையனுக்கு ஒரு ஆயுள் தண்டனை, 7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு தேனி நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. இதை விசாரித்த நீதிமன்றம் வெள்ளையனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News