×

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ். முன்னாள ரவுடியான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வந்தார். திருமணம் ஆன இவருக்கும் பாடி கலைவாணர் தெரு அருகில் இட்லி வியாபாரம் செய்து வரும் அம்மு என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அது கள்ளக் காதலாக மாறியது. அம்முவும் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அம்முவுக்கு இட்லி கடை வைக்க உதவியது கூட சுரேஷ் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த
 
இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ். முன்னாள ரவுடியான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வந்தார். திருமணம் ஆன இவருக்கும் பாடி கலைவாணர் தெரு அருகில் இட்லி வியாபாரம் செய்து வரும் அம்மு என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அது கள்ளக் காதலாக மாறியது. அம்முவும் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அம்முவுக்கு இட்லி கடை வைக்க உதவியது கூட சுரேஷ் என்றும் கூறப்படுகிறது.

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

இந்த நிலையில் வேலைக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் சுரேஷ் கொலை செய்யப்பட்டதும், அம்முவே கொலை செய்திருப்பதும் கண்டுபிடித்தனர். அதாவது சுரேஷ் அன்று இரவு அம்மு கடைக்கு உணவருந்த சென்றுள்ளார். அப்போது அம்மு வேறு ஒருவருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்ததை கண்ட அவர் கோபமாக் அம்முவை தாக்கியுள்ளார்.

இதனால் கோபமான அம்மு நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியுள்ளார். கணவர் நண்பர்கள் உதவியுடன் சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டன்ர். அதன்படி அம்மு சுரேஷை வீட்டிற்கு வரவழைத்து இட்லியில் மயக்க மருத்து கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சுரேஷ் மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை வண்டியில் தூக்கி சென்று பெரும்பாக்கத்தில் உள்ள முட்புதருக்கு கொண்டு சென்று அங்கு அவரது தலையை தனியாக அறுத்து போட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீஸார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News