×

பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் மேலும் தவறு இருக்கிறது – இயக்குனர் பாக்யராஜ் சர்ச்சை கருத்து !

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் ஒரு கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் பல பெண்களை காதலிப்பதாகக் கூறி தங்கள் சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவர்களை அடித்துக் கொடுமைப்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டது தொடர்பாக வீடியோ வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது. அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு
 
பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் மேலும் தவறு இருக்கிறது – இயக்குனர் பாக்யராஜ் சர்ச்சை கருத்து !

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் ஒரு கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் பல பெண்களை காதலிப்பதாகக் கூறி தங்கள் சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவர்களை அடித்துக் கொடுமைப்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டது தொடர்பாக வீடியோ வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது. அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் மீது மட்டும் தவறு இல்லை; பெண்கள் மீதும் தவறு உள்ளது. அவர்களின் பலகீனத்தை அந்த ஆண்கள் உபயோகப்ப்டுத்திக் கொண்டுள்ளனர் என இயக்குனர் பாக்யராஜ் ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News