×

காதலுக்காக செல்போன் டவரில் ஏறிய இளைஞர் – தற்கொலை மிரட்டல் பலித்ததா ?

சேலத்தில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துதர சொல்லி செல்போன் டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் செய்த இளைஞர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்றியுள்ளார். சேலம் வாழப்பாடியில் உள்ள செல்போன் டவர் மேல் நேற்று காலை வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக ஏறியது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் போலிஸுக்குத் தகவல் கொடுக்க போலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். அந்த நபரிடம் பேசிய போது அவரது பெயர் வடிவேலும் எனவும் தான் காதலித்த பெண்ணைத் திருமணம்
 
காதலுக்காக செல்போன் டவரில் ஏறிய இளைஞர் – தற்கொலை மிரட்டல் பலித்ததா ?

சேலத்தில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துதர சொல்லி செல்போன் டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் செய்த இளைஞர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்றியுள்ளார்.

சேலம் வாழப்பாடியில் உள்ள செல்போன் டவர் மேல் நேற்று காலை வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக ஏறியது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் போலிஸுக்குத் தகவல் கொடுக்க போலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அந்த நபரிடம் பேசிய போது அவரது பெயர் வடிவேலும் எனவும் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து தருவதாக சொல்லி அவர்களது பெற்றோர் ஏமாற்றி விட்டதாகவும் அந்த பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் சொல்லி போராட்டம் நடத்தினார். இல்லையேல் குதித்துவிடுவேன் என சொல்லி மிரட்டினார்.

போலிஸார் நடத்திய நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதற்குப் போலிஸார் ஒத்துக்கொண்டதை அடுத்து அவர் டவரில் இருந்து இறங்கினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News