×

பஸ்ஸுக்காக நின்ற பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் – நகையைத் திருடி, பாலியல் பலாத்காரம் !

புதுச்சேரியை அடுத்த காரைக்காலில் வசித்து வருபவர் அந்த மத்திம வயது பெண். இவரது கணவன் இறந்து விட்ட நிலையில் தற்போது தனது மகனுடன் வசித்து வருகிறார். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் அருகில் நின்றுள்ளார். அப்போது அங்கே காரில் வந்த நான்கு இளைஞர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். மறைவான இடத்துக்கு அவரைக் கடத்திச் சென்ற இளைஞர்கள் அவரிடம் இருந்த பணம் மற்றும்
 
பஸ்ஸுக்காக நின்ற பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் – நகையைத் திருடி, பாலியல் பலாத்காரம் !

புதுச்சேரியை அடுத்த காரைக்காலில் வசித்து வருபவர் அந்த மத்திம வயது பெண். இவரது கணவன் இறந்து விட்ட நிலையில் தற்போது தனது மகனுடன் வசித்து வருகிறார். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் அருகில் நின்றுள்ளார்.

அப்போது அங்கே காரில் வந்த நான்கு இளைஞர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். மறைவான இடத்துக்கு அவரைக் கடத்திச் சென்ற இளைஞர்கள் அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டு, அவரை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

இதனைத் தன் மகனிடம் சொல்ல முடியாத அந்த தாய், பணமும் நகையும் திருடு போய்விட்டதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக போலிஸில் புகாரளிக்க அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.  இதையடுத்து போலிஸார் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் சம்மந்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விஜய், ரமேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் தலைமறைவான இரண்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News