×

இனி ஜியோவில் நிமிடத்துக்கு 6 பைசா – வாடிக்கையாளர்கள் அதிருப்தி !

ஜியோவி நெட்வொர்க்கில் இருந்து இனி வேறு நெட்வொர்க்குகளுக்குப் பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக் ஒரு காலத்தில் இண்டர்நெட் மற்றும் அழைப்பு சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து வந்த நிலையில் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இப்போது தொலைதொடர்பு துறையில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ இப்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜியோ சிம் வைத்துள்ளவர்கள்
 
இனி ஜியோவில் நிமிடத்துக்கு 6 பைசா – வாடிக்கையாளர்கள் அதிருப்தி !

ஜியோவி நெட்வொர்க்கில் இருந்து இனி வேறு நெட்வொர்க்குகளுக்குப் பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக் ஒரு காலத்தில் இண்டர்நெட் மற்றும் அழைப்பு சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து வந்த நிலையில் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இப்போது தொலைதொடர்பு துறையில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ இப்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜியோ சிம் வைத்துள்ளவர்கள் ஜியோ சிம் வைத்துள்ளவர்களுடன் பேசினால் மட்டுமே இனி இலவசம் என்றும், ஜியோவில் வேறு நெட்வொர்க்குகளுக்குப் பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த பைசாவுக்கு இணையாக டேட்டாக்களை வழங்க ஜியோ முடிவு செய்துள்ளது. ஆனால் லேண்ட்லைனுக்கு அழைத்தால் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு கால் அழைப்புகளுக்காக கடந்த ஆண்டு ரூ 13,500 கோடி கட்டணம் செலுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News