×

பிராட்பேண்ட் இலவசம் – பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

BSNL Free Brandband : தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துபவருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த சலுகை அனைத்து பகுதிகளிலும் பொருந்தும். பி.எஸ்.என். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு பிராட்பேண்ட் சேவைக்காக முன்பதிவு செய்து கொள்ளாலாம். அதன்பின் கட்டணிமின்றி இலவசமாக பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.இந்த இணைப்பின்
 
பிராட்பேண்ட் இலவசம் – பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

BSNL Free Brandband : தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் படி பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துபவருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த சலுகை அனைத்து பகுதிகளிலும் பொருந்தும்.

பி.எஸ்.என். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு பிராட்பேண்ட் சேவைக்காக முன்பதிவு செய்து கொள்ளாலாம். அதன்பின் கட்டணிமின்றி இலவசமாக பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.இந்த இணைப்பின் மூலம் மாதம் ரூ.5 ஜி.பி. டேட்டாவை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. அது தீர்ந்ததும், கூடுதல் கட்டணம் செலுத்தி கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் பி.எஸ்.என். எல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை பெற திட்டமிட்டுள்ளது. ஆண்டு சந்தாவை செலுத்தும் போது 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News