×

ஜியோ ரூ.299க்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் ரூ.298 – அதிரடி அறிவிப்பு

பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் பயன்படுத்தும் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ நெட்வொர்க்கோடு போட்டி போட முடியாமல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜியோவிற்கு போட்டியாகவும், அதற்கு இணையாகவும் சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்த பி.எஸ்.என். நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் பிரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜியோ நெட்வொர்க்கில் ஏற்கனவே உள்ள ரூ.299 சலுகைக்கு போட்டியாக இந்த சலுகையை பி.எஸ்.என்.எல்
 
ஜியோ ரூ.299க்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் ரூ.298 – அதிரடி அறிவிப்பு

பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் பயன்படுத்தும் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ நெட்வொர்க்கோடு போட்டி போட முடியாமல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜியோவிற்கு போட்டியாகவும், அதற்கு இணையாகவும் சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்த பி.எஸ்.என். நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் பிரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜியோ நெட்வொர்க்கில் ஏற்கனவே உள்ள ரூ.299 சலுகைக்கு போட்டியாக இந்த சலுகையை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

அதன்படி ரூ.298 விலைக்கு 54 நாட்கள் வேலிடிட்டியும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினம் 1 ஜி.பி டேட்டா என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 ஜி.பி. முடிந்தவுடன் டேட்டா வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். தினமும் 100 குறுஞ்செய்தியும் அனுப்ப முடியும்.

ஜியோ நெட்வொர்க் ரூ.299 விலைக்கு 28 நாட்களுக்கு 84 ஜி.பி, அன்லிமிட்டெட் கால், தினமும் 3 ஜி.பி என வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News