×

ஜியோ அறிவித்த ஓராண்டு இலவசம் – வாடிக்கையாளர்கள் குஷி !

ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஓராண்டுக்கு இலவச ப்ரைம் சேவையை வழங்கியுள்ளது. அம்பாணியின் ஜியோ சிம்கார்டு சேவை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல சலுகைகளை அள்ளி வழங்கி தொலைதொடர்பு துறையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜியோவின் அசுர வளர்ச்சியால் மற்ற நிறுவனங்கள் பரவலாக சரிவை சந்தித்துள்ளன. ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடிவிட்டு சென்றன. இந்நிலையில் இப்போது ஜியோ மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகை வழங்கி குஷிப் படுத்தியுள்ளது. ஜியோ பிரைம் சேவை சந்தாவில் இருக்கும்
 
ஜியோ அறிவித்த ஓராண்டு இலவசம் – வாடிக்கையாளர்கள் குஷி !

ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஓராண்டுக்கு இலவச ப்ரைம் சேவையை வழங்கியுள்ளது.

அம்பாணியின் ஜியோ சிம்கார்டு சேவை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல சலுகைகளை அள்ளி வழங்கி தொலைதொடர்பு துறையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜியோவின் அசுர வளர்ச்சியால் மற்ற நிறுவனங்கள் பரவலாக சரிவை சந்தித்துள்ளன. ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடிவிட்டு சென்றன.

இந்நிலையில் இப்போது ஜியோ மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகை வழங்கி குஷிப் படுத்தியுள்ளது. ஜியோ பிரைம் சேவை சந்தாவில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஓர் ஆண்டுக்கான இலவச சேவையை வழங்கியுள்ளது. புதிதாக ஜியோ பிரைம் சேவையை பெற விரும்புவர்கள் மட்டும் ஓர் ஆண்டுக்கு 99 ரூபாய் கட்டி சேவையைப் பெறலாம் என அறிவித்துள்ளது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் குஷியாகியுள்ளனர்.

ஜியோவின் இந்த ஆஃபரால் மற்ற நிறுவனங்கள் இன்னும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News