×

இழந்தது பணம் மட்டுமல்ல! இத்தனை கோடி வாடிக்கையாளர்களையும்…! ஒரு மாதத்தில் ஏர்டெல்லுக்கு நேர்ந்த சோகம்

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்,ஜியோ வருகைக்கு பிறகு வருவாய் இழப்பை சந்தித்து வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதம் முடிவில் ஏர்டெல் நிறுவனம் 28.42 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக கூறியிருந்தது. இதனிடையே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நவம்பர் மாதத்துக்கான தகவல்கள் கொண்ட அறிக்கையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.1 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏர்டெல்
 
இழந்தது பணம் மட்டுமல்ல! இத்தனை கோடி வாடிக்கையாளர்களையும்…! ஒரு மாதத்தில் ஏர்டெல்லுக்கு நேர்ந்த சோகம்

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்,ஜியோ வருகைக்கு பிறகு வருவாய் இழப்பை சந்தித்து வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதம் முடிவில் ஏர்டெல் நிறுவனம் 28.42 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக கூறியிருந்தது.
இதனிடையே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நவம்பர் மாதத்துக்கான தகவல்கள் கொண்ட அறிக்கையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.1 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் மாதத்தில் மட்டும் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கக்கூடும் என தெரிகிறது.

ஏர்டெல் நிறுவனம் திடீரென அறிவித்த இன்கமிங் கால்களுக்கும் காசு என்று அறிவித்த திட்டமே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வேடபோன் ஐடியா கூட்டணி நிறுவனம் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக முதல் இடத்தில் இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News