×

பேஸ்புக்கை விட்டு வெளியேறுங்கள் – வாட்ஸ்அப் நிறுவனர் பகீர் கோரிக்கை

Praiyan acton asking close FB : முகநூலில் இருந்து வெளியேறுங்கள் என வாட்ஸ் அப் ஆப்பை நிறுவிய பிரையன் ஆக்டன் கோரிக்கை வைத்துள்ளார். வாட்ஸ் அப் செயலியை கண்டுபிடித்தவர்களில் ஒருவர் பிரையன் ஆக்டன். 2014ம் ஆண்டு வாட்ஸ் அப்பை 22 மில்லியன் டாலருக்கு முகநூல் வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. அன்று முதல் முகநூல் நிறுவனத்தை ஆக்டன் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது முகநூல்
 
பேஸ்புக்கை விட்டு வெளியேறுங்கள் – வாட்ஸ்அப் நிறுவனர் பகீர் கோரிக்கை

Praiyan acton asking close FB : முகநூலில் இருந்து வெளியேறுங்கள் என வாட்ஸ் அப் ஆப்பை நிறுவிய பிரையன் ஆக்டன் கோரிக்கை வைத்துள்ளார்.

வாட்ஸ் அப் செயலியை கண்டுபிடித்தவர்களில் ஒருவர் பிரையன் ஆக்டன். 2014ம் ஆண்டு வாட்ஸ் அப்பை 22 மில்லியன் டாலருக்கு முகநூல் வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. அன்று முதல் முகநூல் நிறுவனத்தை ஆக்டன் விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது முகநூல் கணக்குகளை அழித்து விடுங்கள் என மாணவ, மாணவிகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்ததே நாம்தான். ஆனால், தற்போது முகநூலில் நிலைமை மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. எனவே, அனைவரும் முகநூல் கணக்குகளை அழித்துவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், தனது ஊழியர்களுக்காகவே, அவர் வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்துக்கு விற்றதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, தான் முகநூல் கணக்கை பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News