×

பப்ஜி விளையாடிய சிறுவன் திடீர் மரணம் –  உஷார் பெற்றோர்களே !

மத்திய பிரதேசத்தில் பப்ஜி விளையாடிய சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி எனும் வீடியோகேம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமைப் படுத்தி வைத்துள்ளது. நேரங்காலம் இல்லாமல் நள்ளிரவு வரை இந்த விளையாட்டை வெறியோடு விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிமாகி வருகிறது. இதை விளையாடும் போது படபடப்பும் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியும் நம்மை அறியாமல் நம்முள் திணிக்கப்படுகிறது. இந்த விளையாட்டால் சோகமான சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசம்
 
பப்ஜி விளையாடிய சிறுவன் திடீர் மரணம் –  உஷார் பெற்றோர்களே !

மத்திய பிரதேசத்தில் பப்ஜி விளையாடிய சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி எனும் வீடியோகேம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமைப் படுத்தி வைத்துள்ளது. நேரங்காலம் இல்லாமல் நள்ளிரவு வரை இந்த விளையாட்டை வெறியோடு விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிமாகி வருகிறது. இதை விளையாடும் போது படபடப்பும் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியும் நம்மை அறியாமல் நம்முள் திணிக்கப்படுகிறது. இந்த விளையாட்டால் சோகமான சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுஷ் நகரத்தில் வசித்து வரும் ஹருன் குரேசி ரஷீத்தின் 16 வயது மகன் வர்மூன் பப்ஜி கேமுக்கு அடிமையாக இருந்துள்ளான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பப்ஜி விளையாடுவதே அவனது வாடிக்கை. அதைப் போல கடந்த புதன்கிழமை தொடர்ந்து 6 மணிநேரம் விளையாடியபோது நெஞ்சு வலிக் காரணமாக மயக்கமடைந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவன் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் வர்மீனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் மீளா சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News