×

உலகக் கோப்பையைத் தொட்ட ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் – பங்கமாக கலாய்த்த ஸ்டார் ஸ்போட்ஸ் !

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டி இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவைக் கலாய்க்கும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் ஒன்றை ஒளிப்பரப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி கடந்த 1992 முதல் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆனால் ஒரு முறை இன்னமும் கோப்பையை வென்றதில்லை. அதற்காக தென் ஆப்பிரிக்கா வலிமைக் குறைந்த அணி என்றோ அதில் திறமையான வீரர்கள் இல்லை என்றோ சொல்ல முடியாது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் முக்கியமானப் போட்டிகளில்
 
உலகக் கோப்பையைத் தொட்ட ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் – பங்கமாக கலாய்த்த ஸ்டார் ஸ்போட்ஸ் !

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டி இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவைக் கலாய்க்கும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் ஒன்றை ஒளிப்பரப்பியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி கடந்த 1992 முதல் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆனால் ஒரு முறை இன்னமும் கோப்பையை வென்றதில்லை. அதற்காக தென் ஆப்பிரிக்கா வலிமைக் குறைந்த அணி என்றோ அதில் திறமையான வீரர்கள் இல்லை என்றோ சொல்ல முடியாது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் முக்கியமானப் போட்டிகளில் அவர்கள் செய்யும் சிறு தவறால் கோப்பையை நெருங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் அவர்களை ’சோக்கர்ஸ்’ என்றும் கிரிக்கெட் உலகில் சொல்வதுண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்கா தாங்கள் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதையடுத்து இந்தியாவோடு மூன்றாவது போட்டியை விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் போல விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரசிகர்கள் ‘ தென் ஆப்பிரிக்காவில் இருந்து கோப்பையைத் தொட்ட ஒரே வீரர் ஹேரி கிறிஸ்டன் மட்டும்தான். அதற்கு நாங்கள் தான் காரணம். அதற்காக இந்தியாவுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்’ எனக் கூறுவது போல் அமைந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது இந்திய அணிக்குப் பயிற்சியாளராக கிஸிஸ்டன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News