×

வாட்ஸ் ஆப் உடனடியாக அப்டேட் செய்யுங்கள் – ஹேக்கர்களின் தொல்லையால் வாட்ஸ் ஆப் அறிவிப்பு

இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் தகவல் தொடர்பு ஊடகமாக இணையதளம் இருந்துவருகிறது. உலகம் முழுவதும் பொதுமக்களால் அதிக அளவில் உபயோகிக்கப்படும் செயலிகளில் வாட்ஸ் ஆப் செயலி முதல் இடத்தில் உள்ளது. இந்த செயலி மூலமாக குறுஞ்செய்தி அனுப்புதல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்தல், வீடியோ காலிங் மற்றும் உங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்தல் ஆகிய சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன். இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் உட்புக ஆரம்பித்துள்ளதாக அவர்கள் கால் செய்து மொபைல் போன்களை ஹேக்
 
வாட்ஸ் ஆப் உடனடியாக அப்டேட் செய்யுங்கள் – ஹேக்கர்களின் தொல்லையால் வாட்ஸ் ஆப் அறிவிப்பு

இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் தகவல் தொடர்பு ஊடகமாக இணையதளம் இருந்துவருகிறது.

உலகம் முழுவதும் பொதுமக்களால் அதிக அளவில் உபயோகிக்கப்படும் செயலிகளில் வாட்ஸ் ஆப் செயலி முதல் இடத்தில் உள்ளது. இந்த செயலி மூலமாக குறுஞ்செய்தி அனுப்புதல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்தல், வீடியோ காலிங் மற்றும் உங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்தல் ஆகிய சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன்.

இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் உட்புக ஆரம்பித்துள்ளதாக அவர்கள் கால் செய்து மொபைல் போன்களை ஹேக் செய்வதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை அளித்துள்ளது. அந்த கால்களை அட்டண்ட் செய்ததும் உடனடியாக மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்களின் கண்காணிப்புக்குள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்களின் அத்துமீறலைத் தடுக்க உடனடியாக வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்ய வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News