×

வருகிறது தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு – பி சி ஸ்ரீராம் வெளியிட்ட வீடியோ !

சினிமா துறையினருக்குப் பெரும் தலைவலியாக இருந்து வரும் தமிழ்ராக்கர்ஸ் போன்ற பைரஸி அச்சுறுத்தல்களுக்கு தடையாக புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாகியுள்ளது. திரைப்படங்கள் வெளியான அதே நாளில் தியேட்டர்களில் எடுக்கப்படும் கேமராக்கள் மூலம் எடுத்த பைரஸீ வீடியோக்கள் வெளியாவது இப்போது வழக்கமாகியுள்ளது. இதனால் சினிமாவுக்கு செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து வருகிறது. இதனால் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பைரஸியை ஒழிக்க சீன நிறுவனம் ஒன்று ஒருப் புதிய தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளது. infrared என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
 
வருகிறது தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு – பி சி ஸ்ரீராம் வெளியிட்ட வீடியோ !

சினிமா துறையினருக்குப் பெரும் தலைவலியாக இருந்து வரும் தமிழ்ராக்கர்ஸ் போன்ற பைரஸி அச்சுறுத்தல்களுக்கு தடையாக புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாகியுள்ளது.

திரைப்படங்கள் வெளியான அதே நாளில் தியேட்டர்களில் எடுக்கப்படும் கேமராக்கள் மூலம் எடுத்த பைரஸீ வீடியோக்கள் வெளியாவது இப்போது வழக்கமாகியுள்ளது. இதனால் சினிமாவுக்கு செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து வருகிறது.

இதனால் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பைரஸியை ஒழிக்க சீன நிறுவனம் ஒன்று ஒருப் புதிய தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளது. infrared என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பதை ஒழிக்க புதிய வழி கண்டுபிடித்துள்ளனர். நம் கண்கள் அகச்சிவப்பு கதிர்களை ஊடுருவும் தன்மைக் கொண்டவை. ஆனால் கேமராக்களுக்கு இந்த தன்மை இல்லை. நாம் கண்களால் திரையில் படத்தைப்  பார்க்குபோது சாதாரணமான தெரியும் வீடியோ கேமராக்களில் எடுக்கப்படும்போது மட்டும் மங்கலாகவும் வாட்டர் மார்க்கோடும் தெரியும்.  இந்த தொழில்நுட்பத்தை சீனாவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் பொருத்தியுள்ளனர்.

இதனை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். விரைவில் இந்த தொழில்நுட்பம் இந்தியாவுக்கும் வரலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News