×

ஐஸ்வர்யா இந்த வாரம் நிச்சயம் வெளியேறுவார்- பிரபல நடிகை நம்பிக்கை

சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி மும்தாஜ் குறித்தும், ஐஸ்வர்யா பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மும்தாஜ் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிக பெருமக்களிடையேயும், மும்தாஜ் ஆர்மிக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்தாஜ் வெளியேற்றப்பட்டது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி விஜய் டிவியின் புகழ் பெற்ற தொடர் சரணவண் மீனாட்சி சீரியல் புகழ் ரக்ஷிதா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த
 
ஐஸ்வர்யா இந்த வாரம் நிச்சயம் வெளியேறுவார்- பிரபல நடிகை நம்பிக்கை

சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி மும்தாஜ் குறித்தும், ஐஸ்வர்யா பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மும்தாஜ் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிக பெருமக்களிடையேயும், மும்தாஜ் ஆர்மிக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்தாஜ் வெளியேற்றப்பட்டது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி விஜய் டிவியின் புகழ் பெற்ற தொடர் சரணவண் மீனாட்சி சீரியல் புகழ் ரக்ஷிதா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஐஸ்வர்யா, மும்தாஜ், பாலாஜி, ஐனனி, விஜி, ரித்விகா இருந்தனர். இதில் ஐஸ்வர்யா கட்டாயமாக வெளியேறுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்தது. ஆனால் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டு பிக்பாஸ் மும்தாஜை வெளியேற்றியதை பற்றி பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

ஐஸ்வர்யா இந்த வாரம் நிச்சயம் வெளியேறுவார்- பிரபல நடிகை நம்பிக்கை

இந்நிலையில் மும்தாஜ் வெளியேறியது பற்றி சரவணன் மீனாட்சி ரக்ஷிதா கூறியதாவது, மும்தாஜ் உள்ள இருக்கிற வரைக்கும் அவங்க மீது இத்தனை பேர் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியாது. அவங்க வெளியே வந்ததும், கடவுளே அவங்க வெளியே வந்துட்டாங்கனு முதல் ஆளா சந்தோஷப்பட்டது நான் தான். ஏனெனில் அவர் வெளியேறி பிறகு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க்கள் அனைத்தும் மிக ரணகளமாக இருந்தது. நிச்சயமாக அவரால் இந்த டாஸ்க்கை செய்திருக்க முடியாது. ராணி எப்போம் ராணியாகவே தான் இருக்க வேண்டும்.

எனவே தான் மும்தாஜ் வெளியே வந்தது சரி என்று எனக்கு தோன்றியது என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை ரக்ஷிதா. அதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா பற்றி கூறியதாவது, அவர் எப்போது எப்படி மாறுவார் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த இடத்தில் அழுது சாதிக்க வேண்டுமா அந்த இடத்தில் அழுது சாதித்து காரியத்தை முடித்து விடுவார். மேலும் எந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அமைதியாக இருந்து கொள்ளுவார். அது தான் அவருடைய குணம். அதனால் தான் அவர் எங்கு எப்படி நடநது கொள்ள வேண்டும் என்ற வித்தையை மட்டும் விரல் நுனியில் வைத்துள்ளார். எனவே கட்டாயமாக இந்த வாரம் என்னை பொருத்த மாட்டில் ஐஸ்வர்யா வெளியேற்றபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News