×

ஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை!பரபர கருத்து சதீஷ்

பிக் பாஸ் சீசன் 2 17ம் தேதி தொடங்கிய நிலையில் அது பற்றிய விமர்சனங்களும், மீம்ஸ்களும் வர தொடங்கி உள்ளன. சினிமா பிரபலங்களும் இது பற்றி கருத்து கூறி வருகின்றனர். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் சதீஸ் அவ்வப்போது தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது இணையதளத்தில் கருத்துக்களை பதிவிட்டி வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் சதீஸ் தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 2வை பற்றி
 
ஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை!பரபர கருத்து சதீஷ்

பிக் பாஸ் சீசன் 2 17ம் தேதி தொடங்கிய நிலையில் அது பற்றிய விமர்சனங்களும், மீம்ஸ்களும் வர தொடங்கி உள்ளன. சினிமா பிரபலங்களும் இது பற்றி கருத்து கூறி வருகின்றனர். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் சதீஸ் அவ்வப்போது தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது இணையதளத்தில் கருத்துக்களை பதிவிட்டி வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் சதீஸ் தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 2வை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக இந்த சீசனில் யாரும் இல்லை என்று சதீஸ் தெரிவித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 ஞாயிறு அன்று தொடங்கி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களை கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களையும் ஒப்பிட்டு பலரும் இணையதளத்தில் கலாய்த்தும் விமர்சித்தும் வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 1வில் கலந்து கொண்டு போட்டியாளர்களை போன்று உள்ளவர்கள் என்று இந்த சீசனில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு ஒரு பட்டியலை போட்டு வருகின்றனர்.

நடிகர் சதீஸ் தற்போது உள்ள போட்டியாளர்கள் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவர்களுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். சென்றாயன் – பரணி என்றும், மும்தாஸ் – நமீதா என்றும், பாலாஜி – வையாபுரி, மஹத் – ஹாரிஷ் கல்யாணன் என்றும், ஹாரிக் – ஆரவ் என்றும், பொன்னம்பலம் – கஞ்சா கருப்பு, யாஷிகா – ரைஸா, அனந்த் வைத்யநாதன் – சினேகன் என்றும் ஒவியா – ஒவியா தான் என்றும், ஜூலி – ஈடு இணையாக யாரும் இல்லை என்றும் ஒப்பிட்டு உள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News