×

பிக்பாஸ் இனிமேல் நமக்கு செட்டாகாது; ஆளை விடுங்கப்பா…: கஞ்சா கருப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இரண்டு வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு தற்போது பிசியாக நடிப்பில் களமிறங்கிவிட்டார். தற்போது இவர் கைவசம் ‘சந்தன தேவன்’, ‘கிடா விருந்து’, ‘அருவா சண்டை’ ‘பள்ளி பருவத்திலே’ உள்ளிட் படங்கள் உள்ளன. இதில், இவர் நடித்த ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது திரையரங்குகளில் ரீலிசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி,
 
பிக்பாஸ் இனிமேல் நமக்கு செட்டாகாது; ஆளை விடுங்கப்பா…: கஞ்சா கருப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இரண்டு வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு தற்போது பிசியாக நடிப்பில் களமிறங்கிவிட்டார்.

தற்போது இவர் கைவசம் ‘சந்தன தேவன்’, ‘கிடா விருந்து’, ‘அருவா சண்டை’ ‘பள்ளி பருவத்திலே’ உள்ளிட் படங்கள் உள்ளன. இதில், இவர் நடித்த ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது திரையரங்குகளில் ரீலிசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜுலி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் உள்ளே செல்ல விருப்பப்பட்டதன் பேரில் அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கஞ்சா கருப்புவுக்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விருப்பமுள்ளதா என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது:

“ஆள விடுங்க சாமி… நமக்கெல்லாம் அது செட்டாகுது. அது வேற ஏரியா. அங்க கொஞ்சம் சூதனமாத்தான் நடந்துக்கணும். பிக்பாஸ் ஷோ ஒரு ஸ்கிரிப்ட் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். அங்குள்ளவர்கள் அனைவரும் நடிக்கிறார்கள் என்றால் அது அடுத்த நிமிஷமே வெளியே தெரிஞ்சிரும் என்று கூறியுள்ளார்.

இவருடைய வரிசையில் ஏற்கெனவே காயத்ரி ரகுராம், ஓவியா, சக்தி ஆகியோரும் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்ல தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News