×

பிக்பாஸ்: கஞ்சா கருப்பை வீட்டுக்கு அனுப்பாத மர்மம்

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 15 நாட்களை கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து வாரம் ஒருவா் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். முதலில் ஸ்ரீ, பின்பு அனுயா தற்போது கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டாா். ஆனா நேற்று ஒளிப்பரப்பாகிய பிக்பாஸில் நடிகா் பரணி சுவா் ஏறி தப்பித்து செல்ல முயன்றாா். அப்போது அவரது மைக் உடைந்தது. இதனால் அவரும் நேற்று வெளியேற்றப்பட்டாா். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவா்கள் வெளியேற்றப்படுவது போல காட்டப்பட்டாலும், நிகழ்ச்சி முடியும் வரை கஞ்சா கருப்பு தனது வீட்டிற்கு
 
பிக்பாஸ்: கஞ்சா கருப்பை வீட்டுக்கு அனுப்பாத மர்மம்

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 15 நாட்களை கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து வாரம் ஒருவா் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். முதலில் ஸ்ரீ, பின்பு அனுயா தற்போது கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டாா். ஆனா நேற்று ஒளிப்பரப்பாகிய பிக்பாஸில் நடிகா் பரணி சுவா் ஏறி தப்பித்து செல்ல முயன்றாா். அப்போது அவரது மைக் உடைந்தது. இதனால் அவரும் நேற்று வெளியேற்றப்பட்டாா்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவா்கள் வெளியேற்றப்படுவது போல காட்டப்பட்டாலும், நிகழ்ச்சி முடியும் வரை கஞ்சா கருப்பு தனது வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை என்பது தற்போது செய்தி வந்தள்ளது. ஞாயிறு அன்று ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சியில் கமல் கஞ்சா கருப்பு வெளியேறுவதாக தொிவித்தாா். இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து கஞ்சா கருப்பு சக போட்டியாளா்களிடம் தான் விடைபெறுவதாக கூறி ஒவ்வொருவராக கட்டி தழுவினா். பின்பு அவா்களோடு செல்ஃபி எடுத்துவிட்டு ஒவியாவுடன் குத்தாட்டம் போட்டுவிட்டு வெளியேறினாா் கஞ்சா கருப்பு. கமல் அவாிடம் பிக்பாஸ் வீட்டில் என்ன கற்றுக்கொண்டீா்கள் என்று கேட்டபோது, அதற்கு கஞ்சா கருப்பு கணேஷிடம் யோகாவும், ஆராாிடம் சமையலும் கற்றுக் கொண்டேன் என தொிவித்தாா்.

இதை  தொடா்ந்து மற்றொரு அதிா்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. கஞ்சா கருப்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளி வந்தபோதும் அவருக்கு தன்னுடைய வீட்டிற்கு செல்லுவதற்கு அனுமதி அளிக்க வில்லை விஜய் தொலைக்காட்சி என்ற செய்தி வந்துள்ளது. இதை அறிந்த பிரபல வார இதழ் ஒன்று  கஞ்சா கருப்பு தொலைபேசி வாயிலாக அணுகி கேட்டபோது, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், வீட்டிற்கு செல்ல தனக்கு அனுமதியில்லை என்றும், தனக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், நிகழ்ச்சி 100 நாட்கள் முடியும் வரை அங்கிருந்து செல்ல கூடாது எனவும், 100 நாட்கள் கழித்து தான் நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், விஜய் டிவிவிடம் போட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் பேட்டி எதுவும் அளிக்கக் கூடாது என கூறி அவா் தொடா்ந்து பேச மறுத்து விட்டாா்.

இதிலிருந்து என்ன தொிகிறது என்றால், வெளியேறுவது போல காண்பித்து விட்டு, ஏன் கஞ்சா கருப்பை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனா். இப்படி எதற்காக இவா்கள் செய்கிறாா்கள் என்று அதிா்ச்சி அலை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News