×

பிக்பாஸில் பெட்டியை தூக்கிட்டு போய்கிட்டே இரு என மனைவியைத் திட்டிய தாடி பாலாஜி!

நடிகர் பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் சீசன் 2ல் கொண்டு வந்ததே அவர்கள் இருவரையும் சேர்க்கும் நோக்கத்தில் தான் என்பது நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இதைத் தாடி பாலாஜியும் ஏற்கனவே வெளிப்படையாகப் பிரிந்த மனைவியுடன் எப்படியாவது சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிக்பாஸில் பங்கேற்பதாகவும் தெரிவித்து இருந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருவரும் பிறர் முன்னிலையில் இருக்கும் போது சாந்தமாகக் கொஞ்சிக்கொள்வது, தனியாக இருக்கும் போது திட்டிக்கொள்வது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. சில
 
பிக்பாஸில் பெட்டியை தூக்கிட்டு போய்கிட்டே இரு என மனைவியைத் திட்டிய தாடி பாலாஜி!

நடிகர் பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் சீசன் 2ல் கொண்டு வந்ததே அவர்கள் இருவரையும் சேர்க்கும் நோக்கத்தில் தான் என்பது நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இதைத் தாடி பாலாஜியும் ஏற்கனவே வெளிப்படையாகப் பிரிந்த மனைவியுடன் எப்படியாவது சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிக்பாஸில் பங்கேற்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருவரும் பிறர் முன்னிலையில் இருக்கும் போது சாந்தமாகக் கொஞ்சிக்கொள்வது, தனியாக இருக்கும் போது திட்டிக்கொள்வது அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

சில நேரங்களில் பாலாஜி நித்யாவை ஆதரித்துப் பேசினால் அவர் அதனைக் கண்டுகொள்வது போன்றும் தெரியவில்லை. இந்த வார பிக்பாஸ் வீட்டுத் தலைவியாக நித்யா பொறுப்பெற்றுள்ள நிலையில் மளிகை பொருட்கள் குறைவாக உள்ளது என்று சமையல் குழு அளித்த புகாரினை இவர் பிக்பாஸ் இடம் கொண்டு செல்லாமல் எங்களையே செய்யச் சொல்கிறார் என்று கூற அடுத்தக் காட்சியில் நீங்கே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வேலையை ஒழுங்காகச் செய், பொருட்கள் ஏதாவது வேண்டும் என்று கேட்டால் உடனே அதனைப் பிக்பாஸ் இடம் தெரிவிக்க வேண்டியது உண் கடமை இல்லை என்றால் பெட்டியை தூக்கிட்டு போய்கிட்டே இரு என்று கோவமாகக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News