×

ஒரே கனவு பலருக்கும் வருமா? – ‘நான்காம் விதி’ குறும்படம் பாருங்கள்

Naangaam Vidhi : அனு சத்யா என்பவர் இயக்கியுள்ள ‘நான்காம் விதி’ குறும்படம் பல விருதுகளை பெற்றதோடு, பலரின் பாரட்டையும் பெற்றுள்ளது. எல்லோரும் கனவுகள் காண்கிறோம். ஆனால், ஒரு கனவு பலருக்கும் வரும் என்ற அறிவியல் உண்மையை மையமாக வைத்து ‘நான்காம் விதி’ குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவம் தொடர்பான கனவு 5 பேருக்கு வருகிறது. அந்த கனவில் ஒரு பெண், ஒரு சிறுவன், தற்கொலைக்கு முயலும் வாலிபர் என வெவ்வேறு காட்சிகள் அந்த 5 பேர்
 
ஒரே கனவு பலருக்கும் வருமா? – ‘நான்காம் விதி’ குறும்படம் பாருங்கள்

Naangaam Vidhi : அனு சத்யா என்பவர் இயக்கியுள்ள ‘நான்காம் விதி’ குறும்படம் பல விருதுகளை பெற்றதோடு, பலரின் பாரட்டையும் பெற்றுள்ளது.

எல்லோரும் கனவுகள் காண்கிறோம். ஆனால், ஒரு கனவு பலருக்கும் வரும் என்ற அறிவியல் உண்மையை மையமாக வைத்து ‘நான்காம் விதி’ குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவம் தொடர்பான கனவு 5 பேருக்கு வருகிறது. அந்த கனவில் ஒரு பெண், ஒரு சிறுவன், தற்கொலைக்கு முயலும் வாலிபர் என வெவ்வேறு காட்சிகள் அந்த 5 பேர் கனவிலும் வருகிறது. அந்த கனவு ஏன் வருகிறது? கனவில் வரும் பெண் யார்? நடைபெறப்போகும் கொலையை அந்த 5 பேரும் தடுத்தார்களா என்பதே ‘நான்காம் விதி’ குறும்படத்தின் கதை ஆகும். அதோடு, காதலின் மெல்லிய உணர்வுகள், உண்மை காதல் காதலியையே தியாகம் செய்யும் என்பதையும் இப்படம் நமக்கு உணர்த்துகிறது. மொத்தம் 33 நிமிடங்கள் குறும்படம் ஓடுகிறது.

ஒரே கனவு பலருக்கும் வருமா? – ‘நான்காம் விதி’ குறும்படம் பாருங்கள்

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் அனு சத்யா. இவர் விஷாலை வைத்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனின் உதவியாளராக பணிபுரிந்து வருகிறர். இப்படத்தில் ஷைலஜா ரவி என்கிற இளம்பெண் ஒரு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். மேலும், நடிகர் ராம்ஜி ஒரு உளவியல் மருத்துவராக நடித்துள்ளார்.

ஒரே கனவு பலருக்கும் வருமா? – ‘நான்காம் விதி’ குறும்படம் பாருங்கள்

இப்படம் முதன் முதலாக சென்ன சத்தியம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படத்தை விஜய் சேதுபதி, நடிகை வரலட்சுமி, சிம்புதேவன் பார்த்திபன், ராஜூ முருகன், நடிகை அமலாபால், விக்னேஷ் சிவன் உள்ளிட பல திரைப்பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்த குறும்படம் சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பெற்றுள்ளது. அதுபோக, பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News