×

காப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

தற்போது டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மாறிவிட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் தினமும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி தனக்கு பிடிக்காத போட்டியாளர்களை பற்றி குறைகூறுவதும், வசை பாடுவதாகவுமே இருந்துகொண்டு இருக்கிறார். திருந்திக்கொள்ளுமாறு அறிவுரை கூறிய கமலேயே, அவர் யார் என்னை குறைகூறுவதற்கு? என்று கேட்டவர். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதேபோல், நமீதா, ஜுலியுடன் இணைந்து
 
காப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

தற்போது டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மாறிவிட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் தினமும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி தனக்கு பிடிக்காத போட்டியாளர்களை பற்றி குறைகூறுவதும், வசை பாடுவதாகவுமே இருந்துகொண்டு இருக்கிறார். திருந்திக்கொள்ளுமாறு அறிவுரை கூறிய கமலேயே, அவர் யார் என்னை குறைகூறுவதற்கு? என்று கேட்டவர்.  இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அதேபோல், நமீதா, ஜுலியுடன் இணைந்து கொண்டு ஓவியாவை கடுப்பேற்றிய காயத்ரியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். அவர் எப்போது வெளியேற்றப்படுபவர்கள் பட்டியலில் வருவார் என்றுதான் பிக்பாஸ் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஏனென்றால், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் முதலில் யாரை வெளியேற்ற வேண்டும் என்று பிக்பாஸிடம் அறிவிப்பார்கள். அதில் அதிக ஓட்டுக்கள் வாங்கியவர்கள் மக்கள் போடும் ஓட்டால் காப்பாற்றப்படுவார் அல்லது வெளியேற்றப்படுவார்.

ஆனால், வீட்டில் உள்ளவர்களில் ஒருசிலருக்கு காயத்ரி வெளியேற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பலரும் அவரது சீனியாரிட்டியை மனதில் வைத்துக் கொண்டு அவரது பெயரை வெளியேறுபவர்களின் பட்டியலில் சொல்வதில்லை. இதனால், காயத்ரி இதுவரை வெளியேறுபவர்களின் பட்டியலில் மக்கள் மன்றத்தில் வரவே இல்லை. அப்படி அவர் வந்திருந்தால் என்றோ வெளியேற்றப்பட்டிருப்பார்.

இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் ரைசாவைத் தவிர அனைவரின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டிலிருந்து காயத்ரி எப்படியும் வெளியேற்றப்பட்டு விடுவார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற பிக்பாஸ் நடத்திய போட்டியில் காயத்ரி வெற்றி பெறவே, அவர் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த முறை எப்படியாவது காயத்ரியை வெளியேற்றிவிட்டால் ஓவியாவை பழிவாங்கிய காயத்ரியை தாங்கள் தண்டிக்க ஒரு வாய்ப்பு என்று எண்ணியிருந்த ஓவியா ரசிகர்களும் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காயத்ரி தற்போது வெளியேற்றப்படுவர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக காயத்ரி என்ன சென்னாலும் அதை மறுக்காமல் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கும் சக்திக்குத்தான் நெருக்கடி அதிகமாகியுள்ளது. எனவே, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சக்தி வெளியேறுவதற்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News