×

பிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா? வியப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்த சீசன் வரைக்கும் பிக்பாஸ் வீட்டை தற்போதைக்கு அடைத்து வைத்துள்ளார்கள். விரைவில் அடுத்த சீசன் தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இரண்டாவது சீசனை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இரண்டாவது சீசன் பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்பதுதான். அதாவது, கமல் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம்
 
பிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா? வியப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்த சீசன் வரைக்கும் பிக்பாஸ் வீட்டை தற்போதைக்கு அடைத்து வைத்துள்ளார்கள். விரைவில் அடுத்த சீசன் தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இரண்டாவது சீசனை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இரண்டாவது சீசன் பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்பதுதான். அதாவது, கமல் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதால், அவருக்கு பதிலாக வேறொருவரை வைத்து இந்த இரண்டாவது சீசனை நடத்தலாம் என பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா? வியப்பில் ரசிகர்கள்

அந்த இன்னொரு நடிகர் யார்? என்பதையும் யூகங்களின் அடிப்படையில் சொல்லி வருகின்றனர். அதாவது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா விஜய் டிவிக்கு ஒன்றும் புதிதானவர் அல்ல. அவர் ஏற்கெனவே விஜய் டிவி நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சியான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அதனால், இந்த நிகழ்ச்சியையும் அவர் திறமையாக தொகுத்து வழங்குவார் என பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கியவர் கமல்ஹாசன். அவருடைய இடத்தில் வேறொரு நடிகரை வைத்துப் பார்க்க எந்த ரசிகரும் விரும்பவில்லை. இனிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் அவர்தான் தொகுத்து வழங்கவேண்டும் என்பது ஒவ்வொரு ரசிகனின் ஆசை. அப்படியிருக்கையில், சூர்யா இந்த நிகழ்ச்சிக்கு வருவது அந்தளவுக்கு பொருத்தமாக இருக்கும? சூர்யாவால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மவுசு கூடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News