×

பிக்பாஸ் 2 வில் ஜூலி கலந்து கொள்ளாதது என்? வெளியான முக்கியத் தகவல்

பிக்பாஸ்1 புகழ் ஜூலி ஏன் பிக்பாஸ் 2விற்கு வரவில்லை என்ற முக்கியக் காரணம் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஜூலி மக்களிடம் எவ்வளவு நல்ல பெயரை எடுத்தாரோ, அதற்கு நேர்மாறாக பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு மக்களிடையே கடும் அவப்பெயரை சம்பாதித்தார். இதனால் சற்று காலம் அவரால் வெளியே தலை காட்ட முடியாமல் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 2 நடைபெற்று வருகிறது. இந்த சீசன் 2 முந்தைய சீசனைப்போல் சுவாரஸ்யமா இல்லை. அனைவருமே நடிக்கிறார்கள் என
 
பிக்பாஸ் 2 வில் ஜூலி கலந்து கொள்ளாதது என்? வெளியான முக்கியத் தகவல்

பிக்பாஸ்1 புகழ் ஜூலி ஏன் பிக்பாஸ் 2விற்கு வரவில்லை என்ற முக்கியக் காரணம் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஜூலி மக்களிடம் எவ்வளவு நல்ல பெயரை எடுத்தாரோ, அதற்கு நேர்மாறாக பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு மக்களிடையே கடும் அவப்பெயரை சம்பாதித்தார். இதனால் சற்று காலம் அவரால் வெளியே தலை காட்ட முடியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 2 நடைபெற்று வருகிறது. இந்த சீசன் 2 முந்தைய சீசனைப்போல் சுவாரஸ்யமா இல்லை. அனைவருமே நடிக்கிறார்கள் என பலர் கூறிவந்தனர்.

ஆகவே நிகழ்ச்சியில் சற்று மசாலாவை சேர்க்க பிக்பாஸ், முந்தைய சீசன் போட்யாளர்களான காய்த்ரி, சிநேகன், சுஜா வருணி, ஆர்த்தி ஆகியோரை வரவழைத்தனர். இதனால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யமாக செல்கிறது.

ஆனால் மக்கள் பலரும் எதிர்பார்த்த ஜூலி வரவில்லை. அவர் வராததற்கான முக்கிய காரணமும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சீசன் 1ல் பங்குபெற்று மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்து விட்டோம். இனியும் அந்த தவறை செய்தால் மக்கள் கடுப்பாகிவிடுவார்கள் என்பதால் தான் பங்குபெறவில்லை என தெரிகிறது. மேலும் ஜூலி இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருவதால் பிக்பாஸில் பங்குபெற அவருக்கு போதிய நேரம் இல்லை என கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News