×

பிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை நந்திதா சுவேதா கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த ஓவியா, ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்று, நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறிவிட்டார். ஆனால், அவரில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் பார்க்க மாட்டோம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில், நடிகர் சுஜா வருணி நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இன்று நடிகர் ஹரீஸ்
 
பிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா?

பிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை நந்திதா சுவேதா கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த ஓவியா, ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்று, நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறிவிட்டார். ஆனால், அவரில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் பார்க்க மாட்டோம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்நிலையில், நடிகர் சுஜா வருணி நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இன்று நடிகர் ஹரீஸ் கல்யாண் சென்றார். மேலும், நடிகை நந்திதா சுவேதாவும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ள நந்திதா “ நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறேனா என ஏராளமான மெசேஜ் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளது. ஆனால், என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதுதான்” என அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் அப்படி வெளியான செய்தி வதந்தி எனத் தெரியவந்துள்ளது.

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News