×

அஜித் இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Director selva : அஜித்தை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் சின்னத்திரைக்கு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது. அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமான ‘அமராவதி’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. அதன்பின் கர்ணா, பூவேலி, நான் அவனில்லை என மொத்தம் 27 படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக அரவிந்த்சாமியை வைத்து ‘வணங்காமுடி’ படத்தை இயக்கினார். இப்படத்தை வெளியிடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திடீரென செல்வா சின்னத்திரைக்கு சென்றுவிட்டார். ரன் என தலைப்பு வைக்கப்பட்ட சீரியலை அவர் இயக்கவுள்ளார். இதில்,
 
அஜித் இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Director selva : அஜித்தை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் சின்னத்திரைக்கு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.

அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமான ‘அமராவதி’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. அதன்பின் கர்ணா, பூவேலி, நான் அவனில்லை என மொத்தம் 27 படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக அரவிந்த்சாமியை வைத்து ‘வணங்காமுடி’ படத்தை இயக்கினார். இப்படத்தை வெளியிடும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், திடீரென செல்வா சின்னத்திரைக்கு சென்றுவிட்டார். ரன் என தலைப்பு வைக்கப்பட்ட சீரியலை அவர் இயக்கவுள்ளார். இதில், நடிகை சாயா சிங்கின் கணவரும், பிரபல சின்னத்திரை நடிகருமான கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள செல்வா “சின்னத்திரை, பெரியதிரை என்கிற காலமெல்லாம் போய்விட்டது. இது வெப் சீரியஸ் காலம். தற்போது மொபைலிலேயே அனைத்தையும் பார்த்து விடுகின்றனர். எனவே, இந்த தளத்திற்கு வந்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News