×

விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

ஜி5 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள புதிய வெப்சீரியஸ் ‘மிட்டா’ பற்றிய விமர்சனத்தை இங்கே காண்போம். உங்கள் வீட்டின் அருகிலோ, அலுவலகத்திலோ அல்லது சாலையிலோ தூக்கம் கலையாத கண்களுடன் உங்களை கடந்து செல்லும் இளம் வாலிபர்களை கவனித்துள்ளீர்களா? அவர்கள் யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். மேலும், விசித்திரமாக செயல்படுவார்கள். ஒருநாள் அவர்களின் வசிக்கும் அறையிலோ, இல்லத்திலோ அவர்கள் சந்தித்தால் அவர்கள் எப்படிப்பட்ட சிக்கலான, வித்தியாசமான சிந்தனைகளுடன் வாழ்கிறார்கள் என்பது நமக்கு புரியும். போதை மருந்தே அவர்களின் உலகமாகவும், தேவையாகவும் இருப்பதை
 
விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

ஜி5 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள புதிய வெப்சீரியஸ் ‘மிட்டா’ பற்றிய விமர்சனத்தை இங்கே காண்போம்.

உங்கள் வீட்டின் அருகிலோ, அலுவலகத்திலோ அல்லது சாலையிலோ தூக்கம் கலையாத கண்களுடன் உங்களை கடந்து செல்லும் இளம் வாலிபர்களை கவனித்துள்ளீர்களா? அவர்கள் யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். மேலும், விசித்திரமாக செயல்படுவார்கள். ஒருநாள் அவர்களின் வசிக்கும் அறையிலோ, இல்லத்திலோ அவர்கள் சந்தித்தால் அவர்கள் எப்படிப்பட்ட சிக்கலான, வித்தியாசமான சிந்தனைகளுடன் வாழ்கிறார்கள் என்பது நமக்கு புரியும்.

போதை மருந்தே அவர்களின் உலகமாகவும், தேவையாகவும் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அதுவே தங்களை சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும் கருவி என அவர்கள் நம்பும் அதிர்ச்சி உண்மையை நான் உணர முடியும்.

விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

சென்னை போன்ற நகரங்களில் இப்படி கஞ்சா போதை மருந்துக்கு அடிமையாகிப் போன வாலிபர்கள் ஏராளம். இரவு, பகல், நேரம், தேதி, கிழமை, மாதம், வருடம் என எதுவுமே இவர்களின் தினசரிகளில் கிடையாது. கஞ்சா, அபின் உள்ளிட்ட பல போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்துவார்கள். போதை மருந்துகளை சட்ட விரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருப்பார்கள்.

அப்படி கஞ்சா குடிப்பதையே பழக்கமாக கொண்டுள்ள இரு வாலிபர்கள் மற்றும் அதன்பின்னால் உள்ள உலகத்தை பற்றியே மிட்டா பேசுகிறது. கஞ்சா அடிக்கும் லல்லுவும், சாதுவும் கஞ்சா தீர்ந்து விட்டதால் அதை வாங்க இரவு வெளியே வருகிறார்கள். அப்போது, காஷ்மீரிலிருந்து மிட்டா போதை மருந்தை கொண்டு வரும் நண்பரை சந்திக்கின்றனர். அப்போது, தவறுதலாக மிட்டா இருக்கும் பையை எடுத்து வந்து விடுகின்றனர்.

‘மிட்டா’வை தனது தோழி மூலம் வேறு ஒருவரிடம் விற்றுவிடுகின்றனர். ஆனால், காஷ்மீர் நண்பன் தனக்கு அந்த போதை மருந்து வேண்டும் அல்லது பணம் வேண்டும் எனக்கூற, போதை மருந்தை வாங்கியரை தேடி கொடைக்கானலுக்கு அவர்கள் காரில் செல்லுகிறார்கள். செல்லும் வழியில் அவர்கள் என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்? கொடைக்கானலில் என்ன நடக்கிறது என்பதை ‘மிட்டா’ வெப் சீரியஸில் காட்டப்பட்டுள்ளது.

விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

விருது வாங்கிய ‘காசிமேடு காதல்’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் லல்லுவும், மைம் கலைஞர் சாதுவும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். போதை மருந்து உண்ட மயக்கத்தில் கேப்டன் அமெரிக்கா, ஐயன் மேன், ஸ்பைடர்மேன் என தொடங்கி, ரஜினி, கமல், அரசியல் தொட்டு, சமூக பிரச்சனை பேசி, டொனால்ட் டிரம்ப்பை தொட்டு மீண்டும் கேப்டன் அமெரிக்காவிற்கே திரும்பும் அவர்களின் ஆரம்ப காட்சியே அதகளம்.

போதை மருந்து அருந்தியவர்களின் முகபாவனைகள், சிந்தனை, போதை ஏறிய கண்கள், உடல் மொழி என அனைத்தையும் கட்சிதமாக கொண்டு வருகிறார்கள். அடிக்கடி “புரோ.. செம புரோ.. தெறிக்க உட்றோம் புரோ..  மஜா புரோ.. செதர உட்றோம் புரோ… மாஸ் பண்ரோம் புரோ… கலக்குறம் புரோ..” எனக் கூறி ரவுண்டி கட்டி அடிக்கிறார்கள்.

லல்லு அவரின் வேடத்தை கன கச்சிதமாக செய்துள்ளார். காசிமேடு காதல் குறும்படம், கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தில் முக்கிய வேடம் என நடித்து சரியான வாய்ப்புக்காக காத்திருந்த லல்லுவுக்கு ‘மிட்டா’ ஒரு வரப்பிரசாதம். எனவே, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். கண்களை உருட்டியும், முகபாவனைகள் மூலமாகவே பல உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுகிறார்.

விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

அதேபோல், சாதுவும் அருமையாக நடித்துள்ளார். எந்த நேரமும் கிஸ்ஸாவாக இருக்கிறார். பார்ப்பதற்கு ஒரு சாயலில் நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் புகழ் டேனி போலவே இருக்கிறார். ‘முன்ன பிரபா ஆளு. இப்ப ஏன் ஆளு புரோ’ என அவர் கூறும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

சாதுவின் தோழியாக வந்து லல்லு மீது காதல் கொள்ளும் வேடத்தில் நடித்துள்ள நடிகை ஷிரா கார்க் கவனம் ஈர்க்கிறார். போதை மருந்து பழக்கம் உடைய நகரத்து மாடர்ன் இளம்பெண் வேடத்தில் நடிக்க முன் வந்ததற்காகவே அவரின் தைரியத்தை பாராட்டலாம். அசால்ட்டாக சிகரெட் குடிக்கும் அறிமுக காட்சி முதல் இறுதி வரை அவரின் நடிப்பு அருமை.

சென்னையின் இருண்ட முகத்தை உரக்க கூறும் ‘மிட்டா’வை டார்க் காமெடி வகையில் படத்தின் இயக்குனர் டி.பி. பிரதீப் இமானுவேல் இயக்கியதோடு இப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.  ‘ஸ்டோனர்ஸ்’ என அழைக்கப்படும் கஞ்சா அருந்துபவர்களின் கதையை தைரியமாக இயக்கியுள்ளார். போதை மருந்து உலகத்தில் இருக்கும் தொழிற் போட்டியை காட்டியுள்ளார். “ஏன் புரோ த்ரிடி (3D) படம்லாம் எடுக்க மாட்றாங்க? எல்லா படத்தையும் திருடிதான் புரோ எடுக்குறாங்க” என்கிற வசனம் தமிழ் சினிமா மீது வீசப்பட்ட சாட்டை அடி.

விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

சென்சார் கிடையாது என்பதால் கெட்ட வார்த்தைகளை அசால்ட்டாக பேசுகிறார்கள். ஆனால், 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் பார்க்கும் படம் எனக்கூறிவிட்டதால் அதை விமர்சிக்க முடியாது.

‘மிட்டா’படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஒன்றவைக்கும் இசையை தரண்குமார் கொடுத்துள்ளார். காட்சிகளின் உணர்வுகளோடு அவரது பின்னணி இசை பயணிக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு விஸ்வநாத். டார்க் காமெடி படம் என்பதால் ஒளிப்பதிவுக்கு அதிகவேலை. அதை சிறப்பாக செய்துள்ளார். கஞ்சா போதையில் லாலுவும், சாதுவும் இரவு நேரத்தில் சென்னை சாலையில் இருசக்கர வாகனத்தில் போகும் போது, போதை கண்களுக்கு சாலை எப்படி தெரியும் என்பதை கூட கச்சிதமாக காட்டியுள்ளார்.

விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

அதேபோல், படத்தி கலை இயக்குனர் துரைராஜ். சாதுவும், லாலுவும் அமர்ந்திருக்கும் வீட்டின் அறையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், கொடைக்கானலில் வீட்டின் சமையலறையையே போதை மருந்து தயாரிக்கும் கூடாரமாக மாற்றியிருக்கும் அவர் கலைத்திறன் நிச்சயம் பாராட்டுக்குரியது. ராம் பாண்டியனின் எடிட்டிங்கில் தொய்வு ஏற்படாமல் ‘மிட்டா’ விறுவிறுவென செல்கிறது.

பரிசோதனை முயற்சியாக யாரும் தொடாத வித்தியாசமான கதைக்களம். திறமையான நடிப்பு, சிறந்த ஒலி அமைப்பு, பின்னணி இசை ஆகியவற்றுக்காகவே ‘மிட்டா’ வை நீங்கள் பார்க்கலாம்.

விசித்திர உலகத்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…

டிரைடண்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல் சார்பில் ஆர்.ரவிச்சந்திரன் தயாரித்துள்ள ‘மிட்டா’ வெப் சீரியஸை பிரபல ‘சென்னை மீம்ஸ்’ வெளியிட்டுள்ளது.

ஜீ5 இணையத்தில் ‘மிட்டா’ கண்டுகளியுங்கள்.

https://www.zee5.com/zee5originals/details/mitta/0-6-1283/latest

ரூ.49 மட்டுமே செலுத்தி ஒரு மாதம் முழுவதும் பல தமிழ் இணைய தொடர்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்!

https://www.zee5.com/

From around the web

Trending Videos

Tamilnadu News