×

ஓவியா உண்ணாவிரதம் ; ரசிகர்கள் அதிர்ச்சி : பின்னணி என்ன?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஓவியா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவகாரம் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சி இன்று ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஓவியாவை சாப்பிடுமாறு அனைவரும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், அவரோ, கேமரா முன்பு வந்து, பிக்பாஸ் என்னை அழைத்து பேசும் வரை சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார். மேலும், இதுபற்றி காயத்ரி, ஆரவ், சக்தி, சினேகன் என எல்லோரும் அவர்களின் அறையில் விவாதிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது, இவர் ஒருவரால் எல்லோரின் தூக்கம்,
 
ஓவியா உண்ணாவிரதம் ; ரசிகர்கள் அதிர்ச்சி : பின்னணி என்ன?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஓவியா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவகாரம் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சி இன்று ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஓவியாவை சாப்பிடுமாறு அனைவரும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், அவரோ, கேமரா முன்பு வந்து, பிக்பாஸ் என்னை அழைத்து பேசும் வரை சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.

மேலும், இதுபற்றி காயத்ரி, ஆரவ், சக்தி, சினேகன் என எல்லோரும் அவர்களின் அறையில் விவாதிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது, இவர் ஒருவரால் எல்லோரின் தூக்கம், நிம்மதி அனைத்தும் கெட்டுப்போகிறது என சக்தி கூற, இந்த வார சனிக்கிழமை இது மாறிவிடும் என காயத்ரி கூறுகிறார். அப்படி மாறவில்லை எனில், சமைக்க மாட்டோம், எந்த வேலையும் செய்ய மாட்டோம் என சக்தி கோபமாக பேசுகிறார்.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் ஓவியா. ஆனால், ஆரவ் அதை ஏற்கவில்லை. எனவே, அழுது புலம்பினார். அதன் பின் அது டாஸ்க் என்றார். என் முன் ஹீரோ இருந்தது போல் இருந்தது, ஒரு சினிமா காட்சி போல நினைத்து நடித்தேன் என்றார். அதன் பின் உண்மையிலேயே ஆரவ்வை நேசிக்கிறேன் என்றார். அவரும் குழம்பி, நிகழ்ச்சியை பார்ப்பவர்களையும் குழப்பினார் ஓவியா.

இந்நிலையில்தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார் ஓவியா. இது ஆரவிற்காகவா அல்லது மற்றவர்களுடன் போட்ட சண்டையா என்பது இன்றைய நிகழ்ச்சியில்தான் தெரிய வரும்.

From around the web

Trending Videos

Tamilnadu News