×

பிக்பாஸ் வீட்டில் சினேகன் -சூடு பிடிக்குமா பிக்பாஸ்?

பிக்பாஸ் சீசன் 2 தற்போது டல்லடித்து கொண்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு மட்டும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியானது அதிகமாக பார்வையாளர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமல் வருகிறார் என்ற ஒரு காரணத்திற்காகவே அதையும் பார்த்து வருகிறார்கள். முதல் சீசன் போல் இல்லை என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கை பார்த்து பார்வையாளர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை பலரும் தவிர்த்து வருகின்றனர். இன்றைய ப்ரொமோவில் முதல் சீசனில் கலந்துகொண்ட சினேகன்
 
பிக்பாஸ் வீட்டில் சினேகன் -சூடு பிடிக்குமா பிக்பாஸ்?

பிக்பாஸ் சீசன் 2 தற்போது டல்லடித்து கொண்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு மட்டும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியானது அதிகமாக பார்வையாளர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமல் வருகிறார் என்ற ஒரு காரணத்திற்காகவே அதையும் பார்த்து வருகிறார்கள். முதல் சீசன் போல் இல்லை என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கை பார்த்து பார்வையாளர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை பலரும் தவிர்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் சினேகன் -சூடு பிடிக்குமா பிக்பாஸ்?

இன்றைய ப்ரொமோவில் முதல் சீசனில் கலந்துகொண்ட சினேகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்களும், மீம்ஸ் கிரியேட்டா்களும் நல்ல தீனியாக இருக்க போகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கும் பிக்பாஸ் இந்த வார லக்சுரி டாஸ்க்கில் கனா காணும் காலங்கள் போன்ற பள்ளிக்கூட டாஸ்க்கை கொடுத்திருக்கிறார். போட்டியாளர்கள் அனைவரும் மாணவ, மாணவியாக நடிக்கின்றனர். இந்த பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக கவிஞர் சினேகன் வருகிறார்.

கடந்த சீசன் போட்டியாளர்களை மிஸ்பண்ணுவதாக பார்வையாளர்கள் தெரிவித்த காரணத்தால் முதல் சீசனில் இறுதி வரை சென்ற கவிஞர் சினேகன் பிக்பாஸ் 2 வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார். உங்களுக்குள் எந்தவொரு கருத்துவேறுபாடு இருந்தாலும் உணவு சாப்பிடும்போது மட்டுமாவது ஒன்றாக உட்காந்து ஒற்றுமையுடன் சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறிய அறிவுரையை கேட்டு நடப்பார்களா என்பதை பார்க்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News