×

பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை

சின்னத்திரையில் பிரபல் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா. பிரபல டீவியில் ஒளிபரப்பாகிய வம்சம் உள்ளீட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வம்சம் தொடரில் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் டிவி சீரியல் நடிகை பிரியங்கா. சீரியல் நடிகை பிரியங்காவுக்கும் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண்பாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி இன்னும் குழந்தை
 
பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை

சின்னத்திரையில் பிரபல் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா. பிரபல டீவியில் ஒளிபரப்பாகிய வம்சம் உள்ளீட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வம்சம் தொடரில் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் டிவி சீரியல் நடிகை பிரியங்கா.

பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை

சீரியல் நடிகை பிரியங்காவுக்கும் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண்பாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி இன்னும் குழந்தை இல்லாத காரணத்திற்காக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் இருவரும் கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வீட்டு வேலைக்கார பெண் இன்று காலையில் வந்து பார்த்தபோது பிரியங்கா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

பிரியங்கா வீட்டில் பணியாற்றும் பெண் கொடுத்த தகவலை அடுத்து விரைந்த போலீஸார் பிரியங்கா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது தற்போது அதிகமாக கொண்டே போகிறது. அவர்கள் மன அழுத்தம் காரணமாகவும், வாய்ப்புகள் கிடைக்காத காரணத்திற்காகவும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு முன்னதாக சீரியல் நடிகர், நடிகைகளான சபர்ணா, சாய் பிரசாந்த், ஷோபனா, முரளி மோகன் உள்ளிட்ட தற்கொலை செய்துகொண்டனர். இதனால் சின்னத்திரை உலகத்தை சேர்ந்தவர்களும் திரையுலகத்தை சோ்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News