×

தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படும் ரம்யா! பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவிற்கு இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பிக்பாஸ் புரோமோ வீடியோவில் இருப்பது போல உள்ள பரபரப்பு நிகழ்ச்சியை பார்க்கும் போது இல்லை. தற்போது இன்றைய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. தினமும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதுபோல பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு போலீஸ் திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் திருடர்களாக ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியலும், போலீசாக மகத், சென்ட்ராயன்,மும்தாஜ் போன்றவர்கள்
 
தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படும் ரம்யா! பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவிற்கு இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பிக்பாஸ் புரோமோ வீடியோவில் இருப்பது போல உள்ள பரபரப்பு நிகழ்ச்சியை பார்க்கும் போது இல்லை. தற்போது இன்றைய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

தினமும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதுபோல பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு போலீஸ் திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் திருடர்களாக ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியலும், போலீசாக மகத், சென்ட்ராயன்,மும்தாஜ் போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த வார வீட்டின் தலைவராக ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருடன் போலீஸ் டாஸ்கினால் போட்டியாளர்களுக்கிடையில் சண்டை படுபயங்கரமாக நடைபெறுகிறது. யாஷிகாவிற்கும் மகத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதற்கு பிறகு பாலாஜிக்கும் மகத்திற்கும் இடையே அதிகமாக சண்டை ஏற்பட்டது.

தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் தலைவி ரம்யா போலீஸ் திருடன் டாஸ்க் ரொம்ப சீப்பாக இருக்கிறது என பிக்பாஸிடம் புகார் கூறுகிறார். இதனால் பிக்பாஸ் தலைவர் பதவியிலிருந்து ரம்யாவை நீக்குகிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்தவாரம் எவிக்சனுக்கு ரம்யாவை நேரடியாக நாமினேட் செய்யப்படுகிறார் என்று அறிவிக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News