×

தொடங்கியது பிக்பாஸ் 2 படப்பிடிப்பு

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் சர்ச்சையில் சிக்கினாலும், அதன் பின் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் அந்த நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குகிறார் என்றதும் ரசிகர்கள் மத்தியில் செம ரீச்சானது. சனி மற்றும் ஞாயிறு பஞ்சாயத்து பேச்சும் கமல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே அனைத்து தரப்பினரும் தொலைக்காட்சி முன்னாடி மணி அடித்தாற்போன்று வந்து அமர்ந்து விடுவார்கள். பிக்பாஸ் முதல் தொடரில் ஒவியா, ஆர்த்தி, நமீதா,ஆரவ், ரைசா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட 15 பேர்
 
தொடங்கியது பிக்பாஸ் 2 படப்பிடிப்பு

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் சர்ச்சையில் சிக்கினாலும், அதன் பின் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் அந்த நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குகிறார் என்றதும் ரசிகர்கள் மத்தியில் செம ரீச்சானது. சனி மற்றும் ஞாயிறு பஞ்சாயத்து பேச்சும் கமல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே அனைத்து தரப்பினரும் தொலைக்காட்சி முன்னாடி மணி அடித்தாற்போன்று வந்து அமர்ந்து விடுவார்கள்.

பிக்பாஸ் முதல் தொடரில் ஒவியா, ஆர்த்தி, நமீதா,ஆரவ், ரைசா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கவிஞர் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் இறுதி கட்டத்தில் இருந்தனர். அதில் ஆரவ் வெற்றி பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்புகள் இதன் மூலம் கிடைக்கப்பெற்று படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். கஞ்சா கருப்பு, வையாபுரி உள்ளிட்டவா்களும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் இதன் கிடைக்கப்பெற்றது. அதுபோல களவாணி படத்தின் மூலம் அறிமுகமான ஒவியா பிக்பாஸ் மூலம் தனக்கென ஒரு இடத்தை ரசிகா்கள் மனதில் பிடித்துக்கொண்டார். தற்போது ஒவியா படங்கிளல் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் எளிதாக செல்லும் என்று கமல் அரசியல் குறித்து பேசி அசத்தி மக்களின் வரவேற்பை பெற்றார். இதனால் அடுத்து சீசன் எப்போது தொடங்கும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. அரசியல் களம் இறங்கிய கமல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய காரணத்தால் அடுத்த பிக்பாஸ் சீசன் 2வை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிக்பாஸ் சீசன் 2வை சூர்யா அல்லது அரவிந்த சாமி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 புரொமோஷன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார். அந்த ஷூட்டிங்கில் கமல் பங்கேற்று நடித்திருக்கிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர்கள் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த புரொமோஷன் வீடியோ விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. எனவே பிக்பாஸ் சீசன் 2யும் நல்ல பரபரப்பாக சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. ஜூன் மாதம் பிக்பாஸ் 2 ஆரம்பமாக உள்ளது என கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News