×

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரியவந்தது. சசிகுமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். கடன் பிரச்சனை காரணமாக ஸ்டுடியோவிற்கு சொந்தமான கேமராவை அவர் அடகு
 
பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரியவந்தது.

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

சசிகுமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். கடன் பிரச்சனை காரணமாக ஸ்டுடியோவிற்கு சொந்தமான கேமராவை அவர் அடகு வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர் இன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவருடன் பணிபுரியும் மகேஷ் என்பவர் ‘கேமரா திருடன்’ என சசிகுமாரை கிண்டலடித்து வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பினார் என்றும், இதனால் மனமுடைந்த சசிக்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News