×

காயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபறக்க கிளம்பியுள்ளது. நேற்று சக்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் காயத்ரி தான் தனிமைப்பட்டிருப்பது போல் உணர்ந்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட ரொம்பவும் உணர்ச்சிவசப்படக் கூடியவரான காயத்ரி, தற்போது ரைசா மீது ரொம்பவும் எரிச்சலில் உள்ளார். ரைசாவின் சாதாரண வார்த்தைகள்கூட காயத்ரிக்கு பெரும் எரிச்சலை உண்டாக்குகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இருந்த காயத்ரி, கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கால் காப்பாற்றப்பட்டார்.
 
காயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபறக்க கிளம்பியுள்ளது. நேற்று சக்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் காயத்ரி தான் தனிமைப்பட்டிருப்பது போல் உணர்ந்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட ரொம்பவும் உணர்ச்சிவசப்படக் கூடியவரான காயத்ரி, தற்போது ரைசா மீது ரொம்பவும் எரிச்சலில் உள்ளார். ரைசாவின் சாதாரண வார்த்தைகள்கூட காயத்ரிக்கு பெரும் எரிச்சலை உண்டாக்குகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இருந்த காயத்ரி, கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கால் காப்பாற்றப்பட்டார். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ரொம்பவும் கோபத்தை வரவழைத்தது. நடிகை ஸ்ரீப்ரியா இதை நேரடியாகவே கமலிடம் கேட்டார். ஆனால், அதற்கு கமலும், பிக்பாஸும் சொன்ன பதில்கள் யாருக்குமே திருப்தியை கொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

காயத்ரி காப்பற்றப்பட்டதால் அவருடன் சேர்ந்துகொண்டு எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டிருந்த சக்தி, தேவையில்லாமல் வெளியேற்றப்பட்டார். கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயாடா’  என்ற பாடல்தான் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்? என்றுதற்போது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

ஏனென்றால், வீட்டில் உள்ளவர்கள் இவரை வெளியேற்றவேண்டும் என்று சொன்னால்தான் அவர்கள் மக்கள் மன்றத்தில் வந்து ஓட்டு போட்டு வெளியேற்றப்படுவார்கள். யாரும் வீட்டில் உள்ளவர்களில் ஒருசிலரை தவிர யாருமே காயத்ரி வெளியேறவேண்டும் என்று சொல்வதே கிடையாது. அதனால், மீண்டும் காயத்ரி காப்பாற்றப்படுவாரோ என்ற அச்சம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தற்போது இன்று நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவில் காயத்ரியை ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பமும் எதிர்ப்பதுபோன்ற ஒரு காட்சி வெளியாகியுள்ளது. இதில் சினேகனை மட்டும் காண்பிக்காமல், ரைசா, பிந்துமாதவி, வையாபுரி, ஆரவ், கணேஷ் உள்ளிட்ட அனைவரும் காயத்ரியை ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என்று கூறியிருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுத்த வாரம் கண்டிப்பாக காயத்ரி வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News