×

நான் தற்கொலை செய்து கொண்டால்? – நடிகை நந்தினி கண்ணீர் பேட்டி

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலாமான நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவர் மரணமடைவதற்கு முன் தன்னுடைய தற்கொலைக்கு தன்னுடைய மாமனார் (நந்தினியின் தந்தை) ராஜேந்திரனே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். எனவே, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நந்தினியும் அவரது தந்தையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுவை
 
நான் தற்கொலை செய்து கொண்டால்? – நடிகை நந்தினி கண்ணீர் பேட்டி

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலாமான நடிகை  ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், அவர் மரணமடைவதற்கு முன் தன்னுடைய தற்கொலைக்கு தன்னுடைய மாமனார் (நந்தினியின் தந்தை) ராஜேந்திரனே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். எனவே, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், நந்தினியும் அவரது தந்தையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். எனவே, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு நந்தினி அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த வழக்கில் முன் ஜாமீன் அவசியம் இல்லை என நீதிபதி கூறிவிட்டார். இதில் மேல் முறையீடு செய்ய என்னிடம் பணம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில மாதங்களாக நானும், கார்த்திக்கும் பிரிந்து வாழ்ந்தோம். அப்போதெல்லம் என்னை பற்றி தவறாக பேசாத, என் கணவரின் குடும்பத்தினர், தற்போது என்னை பற்றி இழிவாக பேசி வருகிறது. நான் பலருடன் சுற்றுவதாக வாய் கூசாமல் பேசுகிறார்கள்.

இதற்கெல்லாம் நான் மான நஷ்ட ஈடு வழக்கு போட்டால் தாங்க மாட்டார்கள். எல்லோரிடமும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.  அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அட்வான்ஸ் மற்றும் அந்த வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் நான் வாங்கிக் கொடுத்தது. ஆனால், எனக்கு அது தேவையில்லை. ஆனால், என்னைப் பற்றி தவறாக பேசி வருவதால், நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்.

எனது கணவனை கூட பார்க்க அவர்கள் விடவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இடுகாட்டில்தான் அவரின் முகத்தைப் பார்த்தேன். மன உளைச்சலில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். தற்போது நானும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறேன். நானும் தற்கொலை செய்து கொள்ளட்டுமா?. ஆனால், எனக்கு கடமைகள் இருக்கிறது. என்னை நம்பி எனது தாய், தந்தை, தம்பி இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு குழந்தை போன்றவர்கள். அவர்களை காப்பாற்ற நான் உயிர் வாழ வேண்டும். அவர்களை செட்டில் செய்து விட்டு நான் நிம்மதியாக கண் மூடுவேன்” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News