×

இங்கு இருக்கவே பிடிக்கவில்லை: கண்ணீர் வடிக்கும் காயத்ரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பிலிருந்து காயத்ரி செயல்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. மற்றவர்களை மட்டமாக பேசுவது, கெட்ட வாா்த்தைகளால் அர்ச்சனை செய்வது போன்ற நாட்டாமை தனங்களில் ஈடுபட்டு வந்தார். உடன் சக்தியும் ஒத்து ஊதி வந்தார். ஓவியா பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறியதில் காயத்ரி மற்றும் ஜூலியின் பங்கு அதிகம். ஓவியா வெளியேறியதும் மானதுக்குள் நிச்சாயம் மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்கும் காயத்ரிக்கு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கும் முதல், தனது நடவடிக்கை மற்றும் பேச்சுகள் மூலம் பலரின் வெறுப்பை பெற்றிருப்பவர்
 
இங்கு இருக்கவே பிடிக்கவில்லை: கண்ணீர் வடிக்கும் காயத்ரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பிலிருந்து  காயத்ரி செயல்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. மற்றவர்களை மட்டமாக பேசுவது, கெட்ட வாா்த்தைகளால் அர்ச்சனை செய்வது போன்ற நாட்டாமை தனங்களில் ஈடுபட்டு வந்தார். உடன் சக்தியும் ஒத்து ஊதி வந்தார்.

ஓவியா பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறியதில் காயத்ரி மற்றும் ஜூலியின் பங்கு அதிகம். ஓவியா வெளியேறியதும் மானதுக்குள் நிச்சாயம் மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்கும் காயத்ரிக்கு.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கும் முதல், தனது நடவடிக்கை மற்றும் பேச்சுகள் மூலம் பலரின் வெறுப்பை பெற்றிருப்பவர் காயத்ரி. சேரி பிஹேவியர் மற்றும் ‘ஹேர்’ மாதிரி என்ற வார்த்தையை அவர் அடிக்கடி உச்சரிக்கிறார் ஏன்ற குற்றச்சாட்டு அதிகம் காயத்ரி மீது உண்டு.  எனவே, இதுபற்றி நேற்று அவரிடம் கமல்ஹாசன் பேசுகையில், நீங்கள் அதிக கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறீர்கள்.. குறைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார். அது காயத்ரிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணேஷ்,சினேகன், ஆரவ் ஆகியோருடன் அமர்ந்து பேசிய காயதிரி கெட்ட வார்த்தை பேசுவதாக கமல் கூறுவதற்கு எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் என்னை திருத்த என் அம்மாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று கூறினார். அப்போது பேசிய ரைசா என்னைக்கூடத்தான் கெட்ட வார்த்தை பேசியதாக கமல் சார் கூறினார். அதற்கு என்ன இருக்கிறது என்றார். அனால் ஆதனை  ஏற்காத காயத்ரி இங்கு இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை என்க் கூறி அழுகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News