×

என்ன ஆச்சு இந்தியன் 2 ? – பிக்பாஸ் 3-ல் கவனம் செலுத்தும் கமல் !

அரசியலில் பிசியாக வலம் வந்த கமல் இப்போது மீண்டும் பிக்பாஸ் 3-ல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனை குழந்தைகளுக்கும் குடும்பப்பெண்களுக்கும் மத்தியில் அதிகமாக எடுத்து சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 2017 ஆம் ஆண்டு முதல்முதலாக தமிழில் அறிமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. முந்தைய சீசனைப் போல இல்லாவிட்டாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதனால் அடுத்த சீசன் தொடங்குமா
 
என்ன ஆச்சு இந்தியன் 2 ? – பிக்பாஸ் 3-ல் கவனம் செலுத்தும் கமல் !

அரசியலில் பிசியாக வலம் வந்த கமல் இப்போது மீண்டும் பிக்பாஸ் 3-ல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனை குழந்தைகளுக்கும் குடும்பப்பெண்களுக்கும் மத்தியில் அதிகமாக எடுத்து சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 2017 ஆம் ஆண்டு முதல்முதலாக தமிழில் அறிமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. முந்தைய சீசனைப் போல இல்லாவிட்டாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதனால் அடுத்த சீசன் தொடங்குமா அல்லது கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. மேலும் கமல் தீவிர அரசியலில் இறங்கி விட்டதால் அவரே தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வியும் எழுந்தது.

சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது மீண்டும் பிக்பாஸ் தொடங்கி இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் இப்போது கலந்துகொண்டு வரும் கமல் பிக்பாஸ் 3 க்கான புரோமோஷன் வீடியோக்களுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அரசியலில் இவ்வளவு பிஸியாக இருந்த கமல் தேர்தல் முடிந்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பிக்பாஸ் பக்கம் சென்றிருப்பது சந்தேகங்களை அதிகமாக்கியுள்ளது. இந்தியன் 2 அறிவிப்பை கமல் முதன் முதலாக பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில்தான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News