×

பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி படம் எங்கே? – கொதிக்கும் ரசிகர்கள்

Bigg boss Season 3 – பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினியின் வரைபடம் அகற்றப்பட்டிருப்பது அவரின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் 15 பேர் யார் யார் என நேற்று அறிமுகம் செய்யப்பட்டு, ஒவ்வொருவராக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இன்றிலிருந்து தினமும் 9.30 மணியளவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பேட்ட ரஜினி மற்றும் சண்டியர் கமல்ஹாசன் வரைபடங்கள் வைக்கப்பட்டிருந்தது.
 
பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி படம் எங்கே? – கொதிக்கும் ரசிகர்கள்

Bigg boss Season 3 – பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினியின் வரைபடம் அகற்றப்பட்டிருப்பது அவரின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் 15 பேர் யார் யார் என நேற்று அறிமுகம் செய்யப்பட்டு, ஒவ்வொருவராக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இன்றிலிருந்து தினமும் 9.30 மணியளவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி படம் எங்கே? – கொதிக்கும் ரசிகர்கள்

இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பேட்ட ரஜினி மற்றும் சண்டியர் கமல்ஹாசன் வரைபடங்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது ரஜினி வரைபடம் அகற்றப்பட்டு, கமல்ஹாசன் வரைபடம் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. இதில், கமல்ஹாசன் தலையீடு இருந்ததா என்பது தெரியவில்லை.

ஒரு பத்திரிக்கையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஒரு நாள் இருந்தேன். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரஜினியின் புகைப்படம் தற்போது அகற்றப்பட்டிருப்பது ஆச்சர்யாமாக இருக்கிறது’ என டிவிட் செய்துள்ளார்.

இந்த விவகாரம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News