×

விஜய் டிவி புகழ் சரண்யாவின் கணவா் யார் தெரியுமா?

சீரியலில் நடிக்கும் நடிகா்,நடிகைகளை ரசிக சிகாமணிகள் தங்களது உள்ளங்களை கொள்ளையடித்தவா்கள் என பெரிய லிஸ்ட் போட்டு வைத்துள்ளனா். அந்த நடிகா், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக பார்க்கும் அளவிற்கு பிரியம் வைத்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் நாயகி சரண்யா. இவரது நடிப்புக்கென்று ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. அதுவும் நடிகைகள் என்றால் ஒரு பெரிய பட்டியல் தயார் செய்து விடலாம். அந்த லிஸ்ட்டில் மெட்டி ஒலி
 
விஜய் டிவி புகழ் சரண்யாவின் கணவா் யார் தெரியுமா?

விஜய் டிவி புகழ் சரண்யாவின் கணவா் யார் தெரியுமா?

சீரியலில் நடிக்கும் நடிகா்,நடிகைகளை ரசிக சிகாமணிகள் தங்களது உள்ளங்களை கொள்ளையடித்தவா்கள் என பெரிய லிஸ்ட் போட்டு வைத்துள்ளனா். அந்த நடிகா், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக பார்க்கும் அளவிற்கு பிரியம் வைத்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் நாயகி சரண்யா. இவரது நடிப்புக்கென்று ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது.

அதுவும் நடிகைகள் என்றால் ஒரு பெரிய பட்டியல் தயார் செய்து விடலாம். அந்த லிஸ்ட்டில் மெட்டி ஒலி காயத்ரி, தென்றல் துளசி, தெய்வமகள் சத்யா, விஜய் டிவி ப்ரியா பவானி சங்கா் என்று அது நீண்டு கொண்டே போகும். அந்த பட்டியலில் தற்போது இடம் பிடித்துள்ளார் விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா. நிமிடத்திற்கு நிமிடம் முக பாவனைகளை மாற்றும் இவரது நடிப்பினை கண்டு சீரியல் பார்க்கும் பெண்மணிகள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மேலும் சரண்யா அணிந்து வரும் டிசைனா் பிளவுஸ், ஹேர் ஸ்டைல் முதற்கொண்டு உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் இல்லதரசிகள்.

இவரது நிஜப்பெயரே சரண்யா தானாம். இவா் முதலில் கலைஞா் டிவி, ராஜ் மியூசிக், புதிய தலைமுறை, நியூஸ் 18 போன்ற சானல்களில் நியூஸ் ஆங்கராக பணியாற்றியுள்ளார். மேலும் இவா் வெள்ளித்திரையில் பாபி சிம்ஹாவின் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சோ்ந்த சரண்யாவுக்கு திருமணம் ஆகி விட்டது. இவா் இலங்கைச் சோ்ந்த தமிழரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News