×

வாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா! பட்டியல் இதோ!

Bigg Boss season 3 – விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு பெறப்போகும் பிரபலங்கள் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனை குழந்தைகளுக்கும் குடும்பப்பெண்களுக்கும் மத்தியில் அதிகமாக எடுத்து சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 2017 ஆம் ஆண்டு முதல்முதலாக தமிழில் அறிமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. முந்தைய சீசனைப் போல இல்லாவிட்டாலும்
 
வாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா! பட்டியல் இதோ!

Bigg Boss season 3 – விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு பெறப்போகும் பிரபலங்கள் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசனை குழந்தைகளுக்கும் குடும்பப்பெண்களுக்கும் மத்தியில் அதிகமாக எடுத்து சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 2017 ஆம் ஆண்டு முதல்முதலாக தமிழில் அறிமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. முந்தைய சீசனைப் போல இல்லாவிட்டாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது.

வாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா! பட்டியல் இதோ!

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.

டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி, நடிகை சாந்தினி, நடிகை கஸ்தூரி, நடிகை விசித்ரா, நடிகர் ராதாரவி, வி ஜே ரம்யா, நடிகை பூனம் பஜ்வா, நடிகர் ரமேஷ் திலக், மாடல் பாலாஜி, நடிகர் பிரேம்ஜி, நடிகை மதுமிதா, நடிகர் ஸ்ரீமந்த், நடிகர் சந்தானபாரதி, பாடகர் கிருஷ் என மொத்தம் 14 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், விஜய் தொலைக்காட்சி இன்னும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடைசி நேரத்தில் இந்த பட்டியலில் இருந்து சிலர் வெளியேறலாம். வேறு சில பிரபலங்கள் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News